search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors struggle"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்களின் பணி நேரமாகும்.

    இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் டாக்டர்கள் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மணி நேரம் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மதியம் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
    திருப்பூர்:

    தகுதியின் அடிப்படையில் காலமுறையிலான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ந் தேதி (நேற்று) ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு டாக்டர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் நேற்று ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.

    தற்போது திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக சிகிச்சை பெற திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று காலை ஏராளமான புறநோயாளிகள் சிகிச்சை பெற திருப்பூர் தலைமை ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்து நின்றனர். ஆனால் வழக்கமான நேரத்தை கடந்தும் டாக்டர்கள் வரவில்லை. அப்போதுதான் டாக்டர்கள் போராட்டம் நடைபெறுவது குறித்து நோயாளிகளுக்கு தெரியவந்தது.

    இதன் பின்னர் பயிற்சி மருத்துவர்கள் மூலம் புறநோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது “அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து பலமுறை தெரிவித்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (நேற்று) ஒரு நாள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை என்றால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதியம் மற்றும் பஞ்சப்படி வழங்கிடக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன், பயிற்சி டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 40 பேர் கலந்து கொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி மதியம் வேளையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஒரே நாளில் டாக்டர்கள் போட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு ஆஸ்பத்திரி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×