search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி அரசு ஆஸ்பத்திரியில் முக கவசம் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்-நர்சுகள்
    X

    குமரி அரசு ஆஸ்பத்திரியில் முக கவசம் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்-நர்சுகள்

    • அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • நோயாளிகளும் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு அவர்களும் முககவசம் அணிந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். தமிழக அரசும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் இன்று முதல் முககவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்திலுள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரு கிறது.கடந்த ஒரு வாரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் 6 பேரும் பெண்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருவட்டார், ராஜாக்க மங்கலம், குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலா 2 பேரும், தக்கலை ஒன்றியத்தில் 4 பேரும், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் இன்று முதல் முககவசம் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர்கள் அனைவரும் முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

    நோயாளிகளும் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து நோயாளிகளும் முககவசம் அணிந்தனர்.புற நோயாளிகள் பிரிவில் மருந்து வாங்க வந்தவர்களும் முககவசம் அணிந்திருந்தனர்.இதே போல் மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, குளச்சல், குழித்துறை உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உள்ள டாக்டர்கள், நர்சுகள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். மருந்து வாங்க வந்தவர்களையும் முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினார்கள்.

    வடிவீஸ்வரம், வடசேரி, அகஸ்தீஸ்வரம் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் முககவசம் அணிந்திருந்தனர். இங்கு வந்த நோயாளிகள் பெரும் பாலானோர் முககவசம் அணியாமல் வருகை தந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அவர்களை முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினார்கள்.

    Next Story
    ×