search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோத்தகிரி"

    • விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும்
    • கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும்,

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம் நடந்தது. முகாமில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். இம் முகாமினை முழுமையாக பயன்படுத்தி தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா கோத்தகிரி தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஆவின் மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவர் கோத்தகிரி சார்ந்தோர் கலந்து கொண்டனர். தங்கள் துறையில் கிசான் கடன் அட்டை மூலம் கால்நடைகளுக்கான கடன் பெறுவது பற்றி எடுத்துரைத்தனர். இம்முகாமில் கோத்தகிரி வட்டாரத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 175 விவசாயிகள் கடன் அட்டை பேருக்காக பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். மேலும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும், அதற்கான விண்ணப்பங்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

    ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

    அரவேணு,

    ஆதி தமிழர் கட்சி சார்பில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்பு ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஐக்கையன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் இதில்100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிப்பகுதியில் தூய்மை பணியாளர்களும் பங்கு பெற்றனர்

    இதில் ஆதி தமிழர் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக ரைஸ் முகமது, கோத்தகிரி கிளை தலைவராக கார்த்திக், துணை மாவட்ட செயலாளராக நந்தகுமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளராக சத்தியமூர்த்தி, கிருஷ்ணா புதூர் கிளை செயலாளராக ஆறுமுகம்,எச்எப்சி நகர் கிளை செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
    • தீப்பந்தங்களை காட்டி கிராம மக்கள் கரடியை வனத்திற்குள் விரட்டினர்

    அரவேணு

    கோத்தகிரி பகுதியில் தற்போது வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.குறிப்பாக கரடிகள், சிறுத்தை, யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.

    நேற்று விவசாயி ஒருவரை கரடி தாக்கி படுகாயப்படுத்தியது. கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு மல்லி க்கொப்பை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 34). விவசாயி. இவர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் மறைந்திருந்த ஒரு கரடி, பிரபு மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. பிரபுவை கரடி கடித்து குதறியது.

    இதில் பிரபு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கரடி அங்கிருந்து ஓடியது. பிரபுவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரபுவை தாக்கிய கரடி அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது.பொதுமக்கள் தீப்பந்த ங்களை காட்டி விரட்டினர் இதையடுத்து கரடி அங்கிருந்து ஓடி மறைந்தது. கிராமத்துக்குள் திரியும் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து காட்டு ப்பகுதியில் விட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். காயம் அடைந்த விவசாயி பிரபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ௩ குழந்தைகள் உ ள்ளனர்.

    • மரம் விழுந்து 2 மணி நேரத்தை தாண்டியும் அகற்றப்படாமல் சாலையின் நடுவிலேயே கிடந்தது.
    • ராட்சத மரம் விழுந்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்திற்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை என 2 சாலைகள் செல்கின்றன.

    இந்த சாலைகளில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மாவட்டத்திற்கு செல்லும் போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையும், மலையில் இருந்து கீழே இறங்கும் போது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையையும் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதனால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இன்று அதிகாலையும் வழக்கம்போல கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அதிகாலை 5 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் திடீரென முறிந்து சாலை யின் நடுவே விழுந்தது.

    அதிர்ஷ்டவசமாக அந்த சமயம் வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. மரம் முறிந்து விழுந்தால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் வாகனங்கள், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் வாகனங்கள் நகரமுடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.

    மரம் விழுந்து 2 மணி நேரத்தை தாண்டியும் அகற்றப்படாமல் சாலையின் நடுவிலேயே கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பழங்குடியின மக்கள் தாங்களாகவே முன்வந்து, சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்கு வாகன ஓட்டிகளும் உதவினர். இதை யடுத்து பழங்குடியின மக்க ளும், வாகன ஓட்டிகளும் சேர்ந்து மரத்தை அகற்றி சாலையின் ஒருபுறம் வழியாக வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர்.

    2 மணி நேரத்திற்கு பிறகு வாகனங்கள் அங்கிருந்து சென்று கொண்டிருக்கி ன்றன. இருந்த போதிலும் மரம் முற்றிலும் அகற்ற ப்படா தால் சிரமத்து டனேயே பயணித்து வருகி ன்றனர். எனவே தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்து றையினர் விரைந்து மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.
    • வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள் அசுர வேகத்தில் பயணிக்கின்றன.

    கோத்தகிரி சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அபாயகரமான வளைவுகள் உண்டு. எனவே அங்கு செல்லும் உள்ளூர் வாகனங்கள் வாகனங்கள் வேகத்தை குறைத்து கவனத்துடன் செல்லும். ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள், அபாய வளைவுகள் இருப்பதை அறியாமல், அதிவேகமாக சென்று திரும்புகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேட்டுப்பாளையம்- கோத்தகிரி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டியும் உலக அமைதிக்கான பேரணி நடந்தது.
    • ஊர்வலத்தில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உலக நன்மை வேண்டியும், அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டியும், இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டியும் உலக அமைதிக்கான பேரணி நடந்தது. இதில் கிறிஸ்துவ பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் , பாதிரியார்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு பாதிரியார் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். புனித அந்தோணியார் பள்ளி தலைமை ஆசிரியர் மோட்சா மேரி, ஹோம் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் மவுலிமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது காமராஜ் பகுதியில் தொடங்கி கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக மார்க்கெட், பஸ் நிலையம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் அமைதியாக நின்றனர். இந்த ஊர்வலத்தில் புனித அந்தோணியார் பள்ளி, ஹோம் மெட்ரிக் பள்ளி அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    • காய்கறிகளை கழுவும் தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற எந்தவித வசதியும் செய்யப்படவில்லை.

    அரவேணு,

    தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி செலவில் கோத்தகிரி அருகே எஸ்கைகாட்டி, கஸ்தூரிபா நகர் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய வேளாண் பல்நோக்கு மையம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

    இந்த மையத்தில் மலை காய்கறிகளை கழுவும் நவீன எந்திரம், காய்கறிகளை உலர்த்தும் எந்திரம், காய்கறிகளை பாதுகாப்பாக வைக்கும் குளிர்பதனகிடங்கு, காய்கறி ஏல விற்பனை மையம், காய்கறிகளை தரம் பிரிக்கும் மையம், ஜென ரேட்டர் வசதி, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ப்பட்டன. கோத்தகிரி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை பல்நோக்கு மைய த்திற்கு கொண்டு சென்று கழுவி, இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விற்பனை செய்து வந்தனர்.

    இந்த பல்நோக்கு மையத்தை சமவெளி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், 3 ஆண்டுக்கு செயல்படுத்த ரூ.6 லட்சத்தை வேளாண் வணிகத்துறைக்கு செலுத்த ஒப்பந்தம் போட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பல்நோக்கு மையத்தில் காய்கறிகளை கழுவும் தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. இதனால் அழுக்கு தண்ணீர் தாழ்வான பகுதியில் செல்லும் ஆற்றில் நேரடியாக கலந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பல்நோக்கு மையத்தில் இருந்து வெளியேறும் அசுத்தமான தண்ணீரை ஆற்றில் கலக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் இந்த மையத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயி கடந்த 3 மாதங்களாக வேளாண் வணிகத்துறைக்கு வாடகை செலுத்தாமல் பூட்டி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறி களை கழுவுவதற்கு பல கி.மீ. தொலைவில் உள்ள கூக்கல்தொரை கிராம த்திற்கு சரக்கு வாகனங்க ளில் கொண்டு சென்று தனியார் காய்கறி கழுவும் மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி கழுவி விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, வேளாண் பல்நோக்கு மையத்தை மீண்டும் திறக்கவும், காய்கறி கழுவும் தண்ணீர் பல கிராமங்க ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆற்று நீரில் கலக்காமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது. இதில் தலைவர் வாசுதேவன், துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, செயலாளர் முகமதுசலீம், பொருளாளர் மரியம்மா, இணை செயலாளர் கண்மணி, விக்டோரியா, கிரேசி, லலிதா, சங்கீதா, ரோஸ்லின், ஜம்புலிங்கம், சுரேஸ், பிரேம் சதீஷ், மசினகுடி கரியன், தேவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோத்தகிரி பகுதிகளில் உள்ள நீரோடைகளை தூர்வாரி, நீராதாரத்தை பெருக்க வேண்டும், கோத்தகிரி பண்டகசாலை முன்புறம் உள்ள பாலத்தை அகலப்படுத்தி, வேகத்தடைக்கு இரவில் ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும், நகரப்பகுதிகளில் விற்பனையாகும் இட்லி மாவு பாக்கெட், உப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், கோத்தகிரி தினசரி சந்தையின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய வேண்டும், அளக்கரை குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இறைச்சி, மீன் விற்பனை கடைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியில் பால் பாக்கெட் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.
    • பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது தொடர்கதையாக உள்ளது.

    இந்தநிலையில் கோத்தகிரி அடுத்த கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.

    இதனை பார்த்த தேயிலை தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் சத்தம் போடவே, அந்த கரடிகள் தேயிலை தோட்டம் வழியாக காட்டுக்குள் சென்று விட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

    அதிலும் ஒருசில கரடிகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனை விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. ஒருசில நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து நாசப்படுத்துகிறது. வீடுகளை சுற்றி வந்து உணவு தேடி நோட்டம் பார்த்து நிற்கிறது.

    இதனால் நாங்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்க வேண்டி உள்ளது. எனவே கேசலாடா குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

    கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு சிறிய கடை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது. காலையில் கடை திறப்பதற்காக வந்த கடை உரிமையாளர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அரவேனு சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை பறிக்க செல்ல முடியாமலும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் விடுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து.

    அரவேணு:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் வழிகாட்டுதலின் படி கோத்தகிரி வட்டாரத்தில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், சுப்ரமணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் பேரணியின் முக்கிய அம்சங்களை விளக்கி பேசினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், குன்னூர் ஜெ.சி.ஐ. அமைப்பு தலைவர் பாவனா, எப்.பி.டி. தன்னார்வ அமைப்பு ஜோசப், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங், தன்னார்வலர்கள் நிர்மலா யமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு கோத்தகிரி நெல்லை கண்ணன் அவர்கள் குளிர்பானம் வழங்கினார்.

    படுகர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ ஹெத்தப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே படுகர் இன மக்கள் வசிக்கும் பகுதியான சுள்ளிக்கூடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ ஹெத்தப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் அவர்கள் பாரம்பரிய உடையான வெள்ளை ஆடை அணிந்து கலந்து கொண்டனர். இதில் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் இட்டக்கல் போஜராஜ் கலந்துகொண்டனர்.

    ×