search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடிகள்"

    • கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    கோத்தகிரி, 

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் மஞ்சமலை சாலையில் பகல் நேரத்தில் சாலையில் ஒய்யாரமாக நடந்துச்சென்ற நான்கு கரடியால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    நீண்ட நேரம் சாலையில் சுற்றி திரிந்த நான்கு கரடிகளும் அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. அதன்பிறகே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது.
    • 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர்.

    இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது. அந்த கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது.

    அப்போது தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சுமதி (வயது 25), ஹித்தினி குமாரி (26 ) ஆகியோரை கரடிகள் திடீரென தாக்கியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பெண்களை தாக்கிய கரடிகளை விரட்டி காட்டுக்குள் அனுப்பினர்.

    கரடி தாக்கியதில் 2 பெண்களுக்கும் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    கரடி தாக்கியதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதனையடுத்து டாக்டர்கள் 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு 2 பெண்களுக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 பெண்களுக்கும் ரூ. 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிசிடிவி காமிராவில் உணவு தேடி திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளது
    • கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கரடி, சிறுத்தை, காட்டுமாடு ,யானை, பன்றி, குரங்கு ,போன்ற வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகி லுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் ரோஸ் காட்டேஜ் பகுதிக்கு நேற்று இரவு ஒற்றை கரடி வந்தது. அங்கு அங்கு உள்ள பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றி திரிந்தது. இந்த காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. கோத்தகிரி குடியிருப்புக்குள் கரடி நுழையும் பதிவு வெளியாகி இருப்பதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த உள்ள அணைஹட்டி கிராமத்தில் பகல் நேரத்தி லும் ஒரு கரடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அணைஹட்டி கிரா மத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது அங்கு வனவிலங்குகளின் தொல்லை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அனைஹட்டி கிராமத்துக்கு ஒரு கரடி பட்டப்பகலில் வந்தது. இதுவும் அங்கு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    அணைஹட்டி கிராமத்தில் கரடிகள் இரவு நேரத்தில் சுற்றி திரிவது வழக்கம். ஆனால் பட்டப்பகல் நேரத்திலும் கரடிகளின் நடமாட்டம் தென்படுவது, அங்கு வசிக்கும் பொது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் பகல் நேரத்திலும் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட அனுமதிப்பது இல்லை. மேலும் வெளியே சென்று வரும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தி விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தற்போது சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    • கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.
    • பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது தொடர்கதையாக உள்ளது.

    இந்தநிலையில் கோத்தகிரி அடுத்த கேசலாடா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி சுற்றி வந்தது.

    இதனை பார்த்த தேயிலை தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அவர்கள் சத்தம் போடவே, அந்த கரடிகள் தேயிலை தோட்டம் வழியாக காட்டுக்குள் சென்று விட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரியில் கரடிகள் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் சுற்றி திரிகிறது.

    அதிலும் ஒருசில கரடிகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. இதனை விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. ஒருசில நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து நாசப்படுத்துகிறது. வீடுகளை சுற்றி வந்து உணவு தேடி நோட்டம் பார்த்து நிற்கிறது.

    இதனால் நாங்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்க வேண்டி உள்ளது. எனவே கேசலாடா குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் உலா வருகிறது.
    • கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராமத்தில் இரவு நேரத்தில் 2 குட்டிகளுடன் கரடிகள் கிராமத்துக்குள் உலா வந்தன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்குமுன் வனத்துறையினர் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது.
    • வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதி களில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனத்தை இயக்கி வருகிறார்கள். எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலைகளில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையம் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒருநாள் முழுவதும் கரடி நடமாட்டம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.
    • கரடி நடமாட்டம் இரவில் இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடையம்:

    மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் 3 பேரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடி கடித்து குதறியது.

    இந்நிலையில் கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் டொமினிக் ராஜன் (வயது 63) என்பவரது தோப்பில் கடந்த 12-ந்தேதி இரவில் கரடி புகுந்து அங்கிருந்த 6 தேன் கூடுகளை சேதப்படுத்தியது.

    இதையடுத்து கடையம் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஒருநாள் முழுவதும் கரடி நடமாட்டம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர். எனினும் கரடி சிக்கவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்பகுதியில் கரடி நடமாட்டம் இரவில் இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவில் ரகுமானியாபுரம் பகுதியில் நாய் குரைப்பது அதிகமாக காணப்படுகிறது.

    எனவே இப்பகுதியில் கரடி நடமாடுவதாலேயே நாய் குரைப்பதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கரடி நடமாடிய தோப்பு அருகே அருந்ததியர் காலனி உள்ளது. இப்பகுதி மக்களும் பீதியுடனே காணப்படுகின்றனர். அருகிலுள்ள மைலப்பபுரம் பகுதியில் ஒருவரின் தோப்பில் காணப்பட்ட தேன் கூடுகளையும் கரடி சேதப்படுத்தி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

    இப்பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால், மதுப்பிரியர்கள் சிலர் இரவில் அங்கேயே போதையில் தூங்கி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வன அலுவலர்கள் கரடி நடமாடுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    • இருள் சூழ்ந்தவேளையில் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன.

    வால்பாறை

    வால்பாறை நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். ஆணையர் பாலு, துணைத் தலைவர் செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், வால்பாறைக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே நகராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். மேலும், எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால், இருள் சூழ்ந்தவேளையில் அவை குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருகின்றன. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மேலாளர் ஜலாலுதீன், பொறியாளர் வெங்கடாசலம் உள்பட வார்டு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். 

    ×