கோத்தகிரியில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடிகள்

உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் உலா வருகிறது. கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரியில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடிகள்
Published on

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராமத்தில் இரவு நேரத்தில் 2 குட்டிகளுடன் கரடிகள் கிராமத்துக்குள் உலா வந்தன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்குமுன் வனத்துறையினர் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com