search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumers Association resolution"

    • நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது. இதில் தலைவர் வாசுதேவன், துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, செயலாளர் முகமதுசலீம், பொருளாளர் மரியம்மா, இணை செயலாளர் கண்மணி, விக்டோரியா, கிரேசி, லலிதா, சங்கீதா, ரோஸ்லின், ஜம்புலிங்கம், சுரேஸ், பிரேம் சதீஷ், மசினகுடி கரியன், தேவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோத்தகிரி பகுதிகளில் உள்ள நீரோடைகளை தூர்வாரி, நீராதாரத்தை பெருக்க வேண்டும், கோத்தகிரி பண்டகசாலை முன்புறம் உள்ள பாலத்தை அகலப்படுத்தி, வேகத்தடைக்கு இரவில் ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும், நகரப்பகுதிகளில் விற்பனையாகும் இட்லி மாவு பாக்கெட், உப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், கோத்தகிரி தினசரி சந்தையின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய வேண்டும், அளக்கரை குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இறைச்சி, மீன் விற்பனை கடைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியில் பால் பாக்கெட் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×