search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை முயற்சி"

    • கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
    • ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் சமீபத்தில் போலி புராதன பொருட்கள் விற்பனை மோசடியில் கைதானவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும் சுதாகரனை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை திட்டமிட்டதாக காங்கிரஸ் பிரமுகர் சக்திதரன் என்பவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை காங்கிரஸ் தலைவர் சுதாகரனும் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 முறை என்னை கொல்ல நேரடியாக முயற்சித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.

    • ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டையன் விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார்.

    இவரது மனைவி ஏஞ்சலின் தயா (36). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அரிவாளால் மனைவி ஏஞ்சலின் தயாவை தலை, கழுத்து, கை உள்பட 5 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    இதில் ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் ஏஞ்சலின் தயா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியை அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் செல்வராஜுக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை ஏஞ்சலின் தயா பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் தேடுவது அறிந்த செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.
    • கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், பா.ஜ.க., ஓ. பி .சி. அணி நிர்வாகி.மேலும் பொக்லைன் எந்திரம் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். பொங்கலூர் எஸ்.ஏ.பி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரும் பொக்லைன் எந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.

    இந்நிலையில் எஸ்ஏபி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடை அமைப்பதில் கதிரவனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை செல்வகுமாரின் எதிர்ப்பை மீறி கதிரவனுக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை கொண்டு சாக்கடை கால்வாயை மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் பொக்லைன் வாகனத்தின் குறுக்கே நின்று கொண்டு, அதனை தடுத்து ஆபரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அங்கு சென்ற கதிரவன் தனது பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுனர் வசந்திடம், எதிரே நின்று கொண்டிருந்த செல்வகுமார் மீது ஏற்றும் படி கூறியதாக தெரிகிறது. வசந்த் மறுத்ததால் அவரை இறக்கி விட்ட கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்.பலமாக மோதியதில் செல்வகுமார் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டுவரவே, கதிரவன், வசந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அப்பகுதியினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக படம் எடுத்து வாட்ஸ் அப் , பேஸ்புக் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி பொது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் கதிரவன், வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.மேலும் பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் மாமியார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை சாமி. அவரது மனைவி மேரி டெய்சி (வயது 72). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. இவரது கணவர், முதல் மகன் இறந்து விட்டனர். 2-வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு 2-வது தளத்தில் மேரிடெய்சி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரிடெய்சி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது குன்னூரில் வசித்து வரும் அவரது மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை பிடித்து விசாரித்தபோது கூலிப்படை ஏவி தனது மாமியாரை கொல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படைகளாக செயல்பட்ட நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ரபெக்கா ரோஸ்லின் நிஷா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் மெரி டெய்சியின் மூத்த மகன் அந்தோணி சேவியரை 2-வதாக திருமணம் செய்தேன். எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின் நான் குன்னூர் சென்று விட்டேன். அங்கு உயர்தர நாய்கள் விற்பனை செய்து வருகிறேன்.

    எனது மாமியார் வீடு, நிலங்களை வாங்கி விற்பது போன்ற தொழில்கள் செய்து வருகிறார். நான் எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டேன். அவர் பிரித்து தரவில்லை.

    மேலும் நான் வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் அவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக என்னிடம் வேலை செய்யும் நெல்லையை சேர்ந்த ராஜேஷ் (27) என்பவரிடம் உதவி கேட்டேன். ரூ.15 லட்சம் தருவதாக ஆசைவார்த்தை கூறினேன். எங்களது திட்டம் படி கடந்த 13-ந் தேதி ராஜேஷ் தலைமையில் 4 பேர் புதுவைக்கு வந்து மேரி டெய்சியை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    எனது மாமியாருக்கு பலரிடம் கொடுக்கல்-வாங்கல் தகராறு இருப்பதால் நான் கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்தேன். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரபெக்கா ரோஸ்லின் நிஷா உள்பட 4 பேர் காலாப்பட்டு சிறையிலும், சிறுவன் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
    • ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் மாணவரான சிறுவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியின் துணை முதல்வரும், ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

    மேலும், சிறுவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், " ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

    • பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் மேட்டு தெரு, ரெயில் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் காட்டூர் காளிதாஸ் (வயது 34), இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    நேற்று காலை காளிதாஸ் காரில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே ஜி.எஸ்.டி. சாலைக்கு வந்த நிலையில் அங்கு உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென டீ கடைக்குள் புகுந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் காளிதாஸ்சின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது டீ கடையில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    அந்த நேரத்தில் 2 போக்குவரத்து போலீஸ்காரர்கள் கத்தியுடன் 5 பேர் டீக்கடைக்குள் இருந்து வெளியே ஓடிவந்து காரில் ஏறி வேகமாக செல்வதை கண்டனர். உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றவாறு வாக்கி டாக்கி மூலம் ஊரப்பாக்கம் அருகே ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் விடாமல் துரத்திச் சென்ற போக்குவரத்து போலீசார் ஊரப்பாக்கம் அருகே சக போலீசார் உதவியுடன் காரை மடக்கினர். அப்போது காரில் இருந்து இறங்கி 4 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவனை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    மேலும் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டீ கடைக்குள் படுகொலை செய்யப்பட்ட காளிதாஸ்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் முன்விரோதம் காரணமாக காளிதாஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளிதாஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டு தீ போல் பரவியதை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் 24 மணி நேரத்திற்குள் பிடித்து உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறைமலைநகர் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது.

    காளிதாஸ் சொந்த ஊரான காட்டூர் மற்றும் மறைமலைநகர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மணிமாலா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையீடு செய்திருந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷ் தூண்டுதலின் பேரில்தான் மணிமாலாவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மணிமாலா (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் மணிமாலா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையீடு செய்திருந்தார். இதற்காக மணிமாலா கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் மணிமாலா பலத்த காயமடைந்தார்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மணிமாலாவை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த பாண்டித்துரை (22) என்பவரை பிடித்து போடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷ் தூண்டுதலின் பேரில்தான் மணிமாலாவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்

    இதனையடுத்து போலீசார் பாண்டித்துரை மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். போடி நீதிமன்றம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மறைமலைநகரை அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி.
    • தனியார் வங்கி அருகே வந்த போது மர்ம கும்பல் காளியை வழிமறித்தனர்.

    மறைமலைநகரை அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி. இவர் செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க தலைவராக உள்ளார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் மறைமலைநகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அங்குள்ள தனியார் வங்கி அருகே வந்த போது மர்ம கும்பல் காளியை வழிமறித்தனர். திடீரென அவர்கள் கத்தி, அரிவாளால் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காளி அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காளி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் காளி பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • செல்வம் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்ற சல்லாரி முருகன் (வயது 53).

    சங்கரன்கோவில் அருகே மேல நீலிதநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் வெளியப்பன் என்ற விஜயராஜ் (36). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். நேற்று முன்தினம் விஜயராஜை பார்ப்பதற்காக முருகன் அங்கு சென்றுள்ளார்.

    பின்னர் அவர்கள் இருவரும் வேலை விஷயமாக மேல அழகுநாச்சியார்புரத்தில் இருந்து கீழநீலிதநல்லூர் நோக்கி மொபட்டில் சென்றுள்ளனர்.

    மகேந்திராவாடி பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது மொபட் மீது கருப்பு நிற கார் ஒன்று மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் மற்றும் விஜயராஜ் பலத்த காயமடைந்தனர்.

    அப்போது காரில் இருந்த நபர்கள் அவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மேல நீலிதநல்லூரை சேர்ந்த செல்வம் (30), வெள்ளத்துரை, திருமலாபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மருதுபாண்டி (36) ஆகிய 3 பேர் கார் ஏற்றி முருகன், விஜயராஜை கொல்ல முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து செல்வம் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    • பிரபுவை குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர்.
    • கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் ராஜம் (வயது 57). இவரது மகன் பிரபு வை கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28- ந்தேதி குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் எஸ்.என். சாவடியை சேர்ந்த தங்கபாண்டியன் (27), கம்மியம்பேட்டையை சேர்ந்த சதீஷ் (21), வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது.

    மேலும் தங்கபாண்டியன் மற்றும் சதீஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பிரபுவின் தாய் ராஜம் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர். இதனை மீறி மீண்டும் சாட்சி சொல்ல சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டியதோடு கத்தியால் வெட்ட முயன்ற போது அங்கிருந்து ராஜம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியன் , சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பெண்ணை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • கொலை முயற்சி சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). இவர் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி மாங்கனி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் மணிமாறனுக்கும் அவரது கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இதையறிந்த மணிமாறன் தனது கள்ளக்காதலியின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதற்காக அந்த இளம்பெண்ணுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, கள்ளக்காதலி குறித்து தவறான தகவல் எழுதி மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பினார்.

    அந்த கடிதத்தை மணிமாறன் வீட்டில் வைத்து எழுதினார். அப்போது கடிதத்தில் தவறு ஏற்பட்ட போது அந்த கடிதத்தை கசக்கி வீட்டிலேயே போட்டுள்ளார். அதனை மணிமாறனின் மனைவி மாங்கனி எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

    உடனே இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டதுடன், இளம்பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறும் எச்சரித்தார். இருப்பினும் மணிமாறன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார்.

    மேலும் தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் 4 பேரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு மாங்கனி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மணிமாறனின் நண்பர்கள் 4பேரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் மணிமாறன் உள்ளே வரவழைத்தார். பின்னர் மாங்கனி தூங்கி கொண்டிருந்த அறைக்குள் சென்ற 4 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர்.

    மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே இது குறித்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி மணிமாறன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி உள்ளார்.
    • காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோ. பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அபிநயா (வயது 22). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 9 மாதத்தில் ஆதித்யா என்கிற ஆண் குழந்தை உள்ளது. ஏழுமலை இலங்கையில் என்ஜினீ யராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், திரும ணத்தின் போது 40 சவரன் நகையை போட வில்லை என்று கூறி, வரதட்சணை கேட்டு, அபிநயாவின் கணவர் ஏழுமலை, மாமனார் வீராசாமி, மாமியார் தனக்கொடி, நாத்தனார் சுசிலா ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தியதுடன், இரும்பு பைப்பால் தாக்கி, மண்ணெண்ணையை ஊற்றி அபிநயாவை கொளுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து, அபிநயா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அபிநயா கண வர் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×