search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கு"

    • சிறப்பு குழந்தைகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை முறை குறித்த 6 நாள் கருத்தரங்கு நடந்தது.
    • மதுரை கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் ஆயுஷ் செவிலியர்களுக்காக தொடங்கியது.

    மதுரை

    மத்திய ஆயுஷ் அமைச்சகம் நிதி உதவியுடன் ஆயுஷ் செவிலிய சிகிச்சையாளர்க–ளுக்கான "சிறப்பு குழந்தைகளுக் கான சித்த புற மருத்துவ சிகிச்சை முறைகள்" பற்றிய 6 நாட்கள் தொடர் மருத்துவ கருத்தரங்கு மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை ஆண்டாள்புரம் ஓட்டல் ஸ்ரீதேவியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல் வர் பேராசிரியர் டாக்டர் கே.கனகவல்லி, குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார். மேலும் அவர் ஆயுஷ் தெரபிஸ் டுளுக்கான திறன் மேம் பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். சித்த மருத்துவத்தின் சிறப்பே புற மருத்துவ முறைகள் தான். சிறந்த முறையில் மருத்துவ ஆவணங்களை பதிவு செய்து புற மருத்துவ சிகிச்சையின் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய அவசியம், ஆங்கில மருத்துவத்தில் இருப்பது போன்று செவிலிய பணி மட்டுமல்லாமல் நோயாளிக–ளின் உடனிருந்து புறமருத்துவ சிகிச்சையை தொடர்ந்து செய் யும் வாய்ப்பு ஆயுஷ் தெர–பிஸ்டு–களுக்குத்தான் உள்ளது என் றார்.

    மேலும் பணியின்போது சொந்த விருப்பு வெறுப்பு இன்றி நோயாளிகளின் பாது–காப்பு மற்றும் முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு ஆயுஷ் தெரபிஸ்டுகள் பணி புரிய வேண்டும் என அறிவுரை வழங்கினார். கோகிலா சித்த மருத்துவமனை டாக்டர் ஜெ.–ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். அருப்புக்கோட்டை தி லெமூரியா சித்த மருத்துவ–மனை டாக்டர் பா.மணி–கண் டன் வாழ்த்துரை வழங்கி–னார்.

    கோகிலா சித்த மருத்துவ–மனை மற்றும் ஆராய்ச்சி மைய உறைவிட மருத்துவ அலுவலர் பா.பவித்ரா பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வியக்க வைத்தார். கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய உயர் நிர்வாக அலுவலர் ச.செந்தில்நாதன் நன்றி கூறினார். ஆயுஷ் தெரப்பிஸ்டுகளுக்கான புற–மருத்துவ செய்முறை பயிற்சி கையேடு புத்தகம் வெளியி–டப்பட்டது.

    கோகிலா சித்த மருத்துவ–மனை ஆராய்ச்சி மைய குழந்தை மற்றும் மகளிர் மருத்துவ பிரிவு மருத்துவர் டாக்டர் தபசினி சிறப்பு குழந்தைகள், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக் கான பொடி திமிர்தல், தப்பளம் புறவளையம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் அதன் செய்முறைகளை நேரிடை பயிற்சியாக செய்து காண்பித்தார்.

    தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, புது–டெல்லி, கோவா ஆகிய மாநி–லங்களில் இருந்து 30 ஆயுஷ் தெரபிஸ்டுகள் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி தொடர்ந்து 6 நாட்களாக 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மற்றும் வருகை தர உள்ள சித்த மருத்துவ பேராசிரியர்கள், ஆதரவு வழங்கிய தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்தா ரிசர்ச் கவுன்சில், தமிழ் நாடு இந்திய மருத்துவ துறை இயக்குனரகம், இந்திய மருத்து–வத்துறை பாண்டிச்சேரி, சாந்தகிரி சித்த மருத்துவக் கல்லூரி, ஆரோக்கிய சித்த மருத்துவமனை, மணிப்பால் மருத்துவக் கல்லூரி சித்த மருத்துவப் பிரிவு மற்றும் அனைத்து தனியார் மருத்துவ–மனைகளுக்கும் கோகிலா மருத்துவமனை நன்றிகளை தெரிவித்துள்ளது.

    • கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • பணிபுரிய கூடிய இடங்கள் மகளிருக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூ ரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடை பெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி தலை வர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.

    கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலு வலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு தமிழக அரசு சமூக நலத்திற்காகவும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக செயல்படுத்தும் திட்டங்க ளை விளக்கினார். மேலும் பணிபுரிய கூடிய இடங்கள் மகளிருக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதில் தமிழ் துறை தலைவர் அறிவழகன் நினைவு பரிசுகளை வழங்கி னார். இதில் என்.எஸ்.எஸ். அலுவலர் முருகன், கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் அருண்குமார், கல்லூரி முதல்வர் குணசேகரன், துணை முதல்வர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட சார்பு நீதிபதி ஜெனிபர் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு உதவி கள் பற்றி எடுத்துரைத்தார்.

    இந்தியாவின் முதல் திருநங்கை வழக்குரைஞர் சத்திய ஸ்ரீ சர்மிளா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது திருநங்கைகளை பொதுமக்கள் துன்புறுத்திப் பார்த்து மகிழ்வது, கேலி பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தோழமையுடன் பழக வேண்டும் என்று கூறினார்.

    ஊத்தங்கரை மூத்த வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், தேவேந்திரன், முருகன், தண்டபாணி ஆகியோர், சட்டங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்றும், சட்டப்பணி குழு பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் செய்து வருவது குறித்தும், எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி, ஊத்தங்கரை வட்டசட்டப் பணிக்குழுவைச் சேர்ந்த லாவண்யா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. கருத்தரங்கு நடந்தது.
    • நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் விடுதியில் பா.ஜ.க. சார்பில் தேச பிரிவினை நாள் கருத்தரங்கு மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட பார்வை யாளர் முரளி தரன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் பவர் நாகேந்தி ரன், மணிமாறன், அஜ்மல் கான், கவுன்சிலர் முருகன், மாவட்ட துணைத் தலை வர்கள் சங்கீதா, குமார், லண்டன் கேசவன், கலையரசி, நகர் தலைவர், ஒன்றிய தலைவர் சண்முக நாதன், சிவசங்கர், ராஜ்குமார், முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அகண்ட பாரதத்தின் தேச ஒற்றுமை குறித்து விளக்கி பேசினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குமரன் செய்திருந்தார். நகர் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா்.
    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

    திருப்பூா்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் ஆா்.குருசாமி வரவேற்புரையாற்றினாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சவூதி அரேபியா தபுக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் முகமது அலிசயத், கடல் சாா்ந்த இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது என்ற தலைப்பில் பேசினாா்.இந்தக் கருத்தரங்கில், தாவரவியல் துறை செயலாளா் அபிநயா, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவி பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக் கான புதுமை திட்டங்கள் என்னும் தலைப்பில் சர்வ தேச கருத்தரங்கு நடைபெற் றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் கருத்தரங்கை தொடங் கிவைத்து பேசினார்.

    முதல் அமர்வில் நைஜீ ரியா, ஆப்பிரிக்கா பல் கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப் பேராசிரியர் ராஜன் துரை ராஜ் கலந்து கொண்டு தொழில் முனைவோர் வெளிநாட்டு முதலீடு செய் யும் முறைகள் குறித்து பேசி னார்.

    இரண்டாம் அமர்வில் உதவிப்பேராசிரியர் அர பாத் அலி சிறப்பு விருந்தின ரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக உஸ் பெகிஸ்தான், தொழில் நுட் பத்துறை இணைப்பேரா சிரியர் சுபைர் அலி கலந்து கொண்டு சிறு தொழில் வளர்ச்சியில் கணினி வழி கற்றலின் தாக்கம் குறித்து பேசினார். உதவி பேராசிரி யர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை பேராசிரியர் வேதிராஜன் கலந்து கொண்டு பேசினார். உதவிப்பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கமுதி தனியார் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
    • மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், வளர் இளம் பெண் களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. ஷத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடை–பெற்ற கூட்டத்தில் பள்ளியின் முதல்வர் ஸ்ரீதேவி வர–வேற்று பேசினார். நிர்வாக குழு தலைவர் அய்யாதுரை, செயலர் யோகேஸ்வரன், பொருளாளர் குமரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர்கள் துளசி, மருத முத்து ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தி–னருக்கான பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிவரும் பிரவீன் குமார், சிவா தினேஷ், விக்னேஷ் பாபு, சிவராம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகள், நிதி சேவை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த முத்தமிழ், சகிலா ஆகியோர் ஆங்கில மொழி குறித்து விளக்கினர். டாக்டர் ராஜேஸ்வரி மேலாண்மை குறித்து பேசினார். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • கல்லூரி கருத்தரங்கு நடந்தது.
    • பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பில் "டிஜிட்டல் உலகில் தொழில்முனைவோர்களுக்கான புதுமை திட்டங்கள்" என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். முதல் அமர்வில் நைஜீரியா, ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப்பேராசிரியர் ராஜன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேராசிரியர் வெங்கடேசன் பங்கேற்றார். பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.

    2-வது அமர்வில் பேராசிரியர் அரபாத் அலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உஸ்பெகிஸ்தான், தொழில் நுட்பத்துறை இணைப்பேராசிரியர் சுபைர் அலி கலந்துகொண்டார். முடிவில் பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை, மூத்த பேராசிரியர், வேதிராஜன் கலந்துகொண்டு பேசினார். பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். 

    • தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கருத்தரங்கு நடந்தது.
    • டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் டை ரீச் என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமைப்பின் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது:- சிறிய நகரங்களில் இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வழிகாட்டுவதே எங்களது முக்கிய மான நோக்கமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு சிறிய நகரங் களை கண்டறிந்து தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவ தீர்மானித்துள்ளோம் என்று கூறினார்.

    தலைமை நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராமன், தொழில் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறுவதற்கான செயல்பாடுகளை பற்றி பேசினார். டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
    • 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற, தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்பு ரை நிகழ்ச்சியில், ஊடக வியலாளர் குணசேகரன் சமூக நீதியின் சரித்திரப் பாதை என்ற தலைப்பில் பேசினார்.

    பின்னர் அவர் கூறியதா வது:-

    உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக் கை இந்திய அளவில் 27 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டில் அது 52 விழுக்காடாக இருக்கிறது என்றும், ஒட்டுமொத்த சமூக விழிப்புணர்வு அனை வருக்கும் கல்வி, அனைத்து சமூகத்தினருக்கான விழிப் புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் இந்த வெற்றி பெறப் பட்டது. அந்தக் காலத்தி லேயே தோள் சீலைப் போராட்டம் குறித்து கூறி அதற்கான வரலாற்று நிகழ்வுகளை மாணவர் களுக்கு எடுத்துரைத்தார்.பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மாவட்டத் திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாவதற்கு அரசு பெரும் முயற்சி எடுத்து இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருவதாக கூறினார். ஏறத்தாழ 11 ஆயிரத்து 500 மருத்துவ கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளன.பள்ளித் தேர்வுகளில் எப்போதுமே விருதுநகர் மாவட்டம், முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு கல்விக்கு இங்கு கொடுக்கப் படுகின்ற முக்கியத்துவம் தான் காரணம். அதுபோல இன்று நமக்கு கிடைத்திருக்கக் கூடிய சமூக நீதி என்பது கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தலைவர்களால் கிடைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலும் படிப்பு அறிவை வழங்கியதன் மூலம் கிராமத்தில் இருந்து இளைஞர்கள் படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, சுகாதாரம், மனிதவள குறியீடு ஆகியவற்றில் முன்னோடியாக இருந்தால் மட்டும்தான் முன்னிலை அடைய முடியும்.

    தமிழகம் உயர்கல்வி பயில்வதில் இந்தியாவி லேயே முதன்மை இடத்தில் உள்ளது என்றால், சாதாரண மனிதருக்கும் தரமான கல்வி என்ற சமூக நீதியின் கொள்கையால் வந்தது தான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, தனி துணை கலெக்டர் (சமூக பாது காப்புத்திட்டம்) அனிதா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பிரியதர் ஷினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்ரா மசுப்பி ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், மாவட்ட நூலக அலுவலர் சுப்பிர மணியன், கல்லூரி முதல்வர் குணசேகரன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாண வியர்கள், அரசு அலுவலர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மருந்து வேதியல் துறை சார்பில் திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. இதனை புதுடெல்லி தேசிய மகளீர் ஆணையம் நிதி உதவியுடன் ஜெ.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் ஒருங்கிணைத்தது. கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    பேராசிரியர் ஆனந்த்விஜயகுமார் வாழ்த்தி பேசினார். மருந்து வேதியல் துறை இணைப்பேராசிரியர் கவுரம்மா வரவேற்றார்.நிகழ்ச்சியில் துறைத்தலைவர் காளிராஜன் பேசும் போது திறன் மேன்பாடு மற்றும் ஆளுமை பண்பை வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

    கோவை தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான தேசிய அறக்கட்டளை தலைவர் டாக்டர் கணேசன் தொழில் திறன்களை வளர்ப்பதில் மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுத்தினார்.

    உதகை ஐவிஸ் நிறுவன தலைவர் பாபு பேசுகையில் சமூகஊடகங்களை மாணவர்கள் பயனுள்ளதாக மற்றும் அம்சங்கள் குறித்து பற்றி விளக்கினார். கல்லூரி துணை பேராசிரியர் ஜெயக்குமார் பேசும்போது ஆளுமை வளர்ச்சி மற்றும் மன அழுத்த முறைபாடு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

    மைசூரு ஜெ.எஸ்.எஸ் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் ஜெய் சாமராஜேந்திர பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் புஷ்பலதா மாணவர்களுடன் கலந்துரையாடும் போது உலகளாவிய திறன் மேன்பாட்டில் மாணவ ர்களின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். முடிவில் கல்லூரி இணை பேராசிரியர் துரை ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    ×