தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கருத்தரங்கு

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கருத்தரங்கு நடந்தது. டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கருத்தரங்கு
Published on

மதுரை

மதுரையில் டை ரீச் என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமைப்பின் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது:- சிறிய நகரங்களில் இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வழிகாட்டுவதே எங்களது முக்கிய மான நோக்கமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு சிறிய நகரங் களை கண்டறிந்து தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவ தீர்மானித்துள்ளோம் என்று கூறினார்.

தலைமை நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராமன், தொழில் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறுவதற்கான செயல்பாடுகளை பற்றி பேசினார். டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com