search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர் இளம் பெண்கள்"

    • கமுதி தனியார் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
    • மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், வளர் இளம் பெண் களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. ஷத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடை–பெற்ற கூட்டத்தில் பள்ளியின் முதல்வர் ஸ்ரீதேவி வர–வேற்று பேசினார். நிர்வாக குழு தலைவர் அய்யாதுரை, செயலர் யோகேஸ்வரன், பொருளாளர் குமரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர்கள் துளசி, மருத முத்து ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தி–னருக்கான பிரச்சனைகளும் அதற்குரிய தீர்வுகளும் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் கர்ச்சீப், பாவாடை, சுடிதார் வகைகள், உட்பட பல்வேறு வகையான ஆடைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வளர் இளம் பெண்களான குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது.

    தையல் பயிற்சி மாணவி வின்சா வரவேற்று பேசினார். பயிற்சி நிறைவு விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர். எஸ். ஜே. கென்னடி தலைமை தாங்கினார். தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு சான்றிதழை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி தொடர்ந்து 3 மாதம் நடைபெற்றது. இதில் 13 வயது முதல் 20 வயது வரையுள்ள குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் 17 பேர் பயிற்சி பெற்றனர்.

    இப்பயிற்சியில் கர்ச்சீப், தலையணை உறை, நிக்கர், பெட்டிகோட், பாவாடை வகைகள், மாடல் ஹவுன் வகைகள், மாடல் பிளவுஸ் வகைகள், சுடிதார் வகைகள், உட்பட பல்வேறு வகையான ஆடைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    தையல் பயிற்சி மாணவி அபர்ணா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்கள், பெற்றோர்கள் , மதர் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×