search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தையல் பயிற்சி"

    • உசிலம்பட்டி பழைய அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி பழைய அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளையின் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். புலவர் சின்னன், பேராசிரியர் சூரியராஜன், செயலாளர் லெனின் சிவா, பொருளாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜா, ஜெயச்சந்திரன், தனராஜ் முன்னாள் அரிமா கவர்னர் அறிவழகன் ஆகியோர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புனே வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அருண் பரத், அறக்கட்டளையின் காணொலியை அறிமுகம் செய்து, கையடக்க பிரதியை வெளியிட்டார். அதை முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் பெற்றுக்கொண்டார். இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் கர்ச்சீப், பாவாடை, சுடிதார் வகைகள், உட்பட பல்வேறு வகையான ஆடைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் வளர் இளம் பெண்களான குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள் தொழில் பயிற்சி பெற்று மறுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது.

    தையல் பயிற்சி மாணவி வின்சா வரவேற்று பேசினார். பயிற்சி நிறைவு விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர். எஸ். ஜே. கென்னடி தலைமை தாங்கினார். தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்களுக்கு சான்றிதழை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி முன்னிலை வகித்தார். இப்பயிற்சி தொடர்ந்து 3 மாதம் நடைபெற்றது. இதில் 13 வயது முதல் 20 வயது வரையுள்ள குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் 17 பேர் பயிற்சி பெற்றனர்.

    இப்பயிற்சியில் கர்ச்சீப், தலையணை உறை, நிக்கர், பெட்டிகோட், பாவாடை வகைகள், மாடல் ஹவுன் வகைகள், மாடல் பிளவுஸ் வகைகள், சுடிதார் வகைகள், உட்பட பல்வேறு வகையான ஆடைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    தையல் பயிற்சி மாணவி அபர்ணா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தையல் பயிற்சி பெற்ற வளர் இளம் பெண்கள், பெற்றோர்கள் , மதர் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×