search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்  பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு
    X

    கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

    • கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • பணிபுரிய கூடிய இடங்கள் மகளிருக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூ ரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடை பெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி தலை வர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.

    கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலு வலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு தமிழக அரசு சமூக நலத்திற்காகவும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக செயல்படுத்தும் திட்டங்க ளை விளக்கினார். மேலும் பணிபுரிய கூடிய இடங்கள் மகளிருக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதில் தமிழ் துறை தலைவர் அறிவழகன் நினைவு பரிசுகளை வழங்கி னார். இதில் என்.எஸ்.எஸ். அலுவலர் முருகன், கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×