என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
    X

    ஊத்தங்கரையை அடுத்த வித்யா மந்திர் கல்லூரியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

    • கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் அருண்குமார், கல்லூரி முதல்வர் குணசேகரன், துணை முதல்வர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட சார்பு நீதிபதி ஜெனிபர் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு உதவி கள் பற்றி எடுத்துரைத்தார்.

    இந்தியாவின் முதல் திருநங்கை வழக்குரைஞர் சத்திய ஸ்ரீ சர்மிளா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது திருநங்கைகளை பொதுமக்கள் துன்புறுத்திப் பார்த்து மகிழ்வது, கேலி பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தோழமையுடன் பழக வேண்டும் என்று கூறினார்.

    ஊத்தங்கரை மூத்த வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், தேவேந்திரன், முருகன், தண்டபாணி ஆகியோர், சட்டங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்றும், சட்டப்பணி குழு பொதுமக்களுக்கு சட்ட உதவிகள் செய்து வருவது குறித்தும், எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி, ஊத்தங்கரை வட்டசட்டப் பணிக்குழுவைச் சேர்ந்த லாவண்யா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×