search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓபிஎஸ்"

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.
    • மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    மதுரை:

    2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பெரும்பாலான மாநிலங்களில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.

    இதற்கிடையே தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏராளமான சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது ஆதரவினை அளித்த போதிலும் பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில் இழுபறி நிலையே தற்போது வரை நீடிக்கிறது. இருந்தபோதிலும் வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜெயல லிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்த அ.தி. மு.க. தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் தனித்துவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். 10 தொகுதிகள் வரை பா.ஜ.க. மேலிடத்தில் கேட்டு வரும் நிலையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை வைத்து தான் தனக்காக பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி அதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டார்களா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது தலைமையிலான அ.தி.மு.க.வின் பயணத்தை இந்த தேர்தலில் வெற்றியுடன் தொடங்க வியூகம் வகுத்து வருகிறார்.

    அதேவேளையில், தென் மாவட்டங்களில் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா. ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளார். பா.ஜ.க.வுடன் அமைத்துள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அவ்வாறு நிறுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார், அந்த தொகுதியில் செல்வாக்கு மிகுந்த மகேந்திரனை களமிறக்க முடிவு செய்து அதற்கான வேலை களையும் தொடங்கியுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் கொடுக்கும் 'அடி' தங்களுடன் மீண்டும் மோதக்கூடாது என்பதை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ரவீந்திரநாத்தை தோற்கடித்து அதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வரும் அ.தி.மு.க. அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது.

    இதுபோன்ற காரணங்கள் அறிந்த ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இருந்து மாறி தனது மகன் ரவீந்திரநாத்தை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்கவும் திட்டம் வகுத்து வருகிறார். இதுபற்றி தான் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. மேலிடத்திலும் இதுபற்றி ஆலோசித்து வருகிறார்.

    மதுரையில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் பேராதரவுடன் மற்ற சமு தாய வாக்குகளையும் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் இந்த முயற் சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக தனது மகனுக்கே ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி களமிறங்குவதால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்றும் கணித்துள்ளார்.

    அதேபோல் செல்வாக்கு மிகுந்த ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக காய் நகர்த்தி அவரை எப்படியாவது வெற்றி பெறச்செய்து எம்.பி.யாக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அவரது ஆதரவாளர்களும் வரவேற்று உள்ளனர்.

    • கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன்.
    • எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்து பூஜைகள் செய்தேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன். நானும் ஓ.பி.எஸ்.ம் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவது என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்பாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.
    • பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

    வரும் 24ம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்துக்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன்.

    அதிமுக கரைவேட்டி, கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது.

    பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
    • ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு.

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு காாலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்து இருந்தார்.

    இவரது தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
    • திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

    பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:-

    பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றிய 10 ஆண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    உலக நாடுகள் நம் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு பிரம்மித்து இருக்கிறது.

    பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது.

    ஈபிஎஸ் குறித்த ரகசியத்தை தற்போது வெளியே சொல்ல இயலாது தெரிய வேண்டிய நேரத்தில் வெளியே வரும்.

    கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் ஈபிஎஸ் உடன் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • திருச்சி வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
    • இரு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொள்கின்றனர்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்து நான்கு மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக நாளை (ஜனவரி 2) தமிழகம் வருகிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை காலை திருச்சி வருகிறார்.

    நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அதன்பிறகு, மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு இருக்கும் பன்னாட்டு புதிய விமான முனையத்தை திறந்து வைக்கிறார்.


    கோப்புப்படம்

    கோப்புப்படம்

     

    இதே நிகழ்ச்சியில் ரூ. 19 ஆயிரத்து 850 ரோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆளுனர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்த நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஒ.பி.எஸ். இடையேயான சந்திப்பு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    • அ.தி.மு.க. சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடைவிதிக்க கோரி இ.பி.எஸ். வழக்கு
    • தடை உத்தரவின்படி அதிமுக கொடியைப் பயன்படுத்தப் போவதில்லை என ஓ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம்

    சென்னை:

    அ.தி.மு.க. சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், அ.இ.அ.தி.மு.க. பெயர், அண்ணா படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். சின்னத்தைப் பயன்படுத்துவதால் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


    மேலும், என்னை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில் ஓ.பி.எஸ். பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தடை உத்தரவின்படி அதிமுக பெயர் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தப் போவதில்லை என ஓ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.

    மீறினால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரும்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

    • இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

    அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.

    • கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சின்னத்தை பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம்.
    • தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் என்னை அங்கீகரித்துள்ளது.

    அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், அஇஅதிமுக பெயர், அண்ணா படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்க வேண்டும்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சின்னத்தை பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுவதாக மனுவில் ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

    என்னை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்றும் ஈபிஎஸ் கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

    • 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது.
    • வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம்.

    தேனி:

    தேனி பங்களாமேட்டில் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,

    தான் முதல்-அமைச்சர் ஆனவுடன் 3 மாதங்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர்.

    எனவே இந்த வழக்கில் கொலை செய்தவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை உணர்த்தும் வகையில் தான் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இனியும் காலம் தாழ்த்தினால் அ.ம.மு.க. தொண்டர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.

    எப்போதுமே மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் செயல்படும் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது மட்டுமின்றி, சிலமணிநேரம் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பதவி ஆசை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் அக்கறைகாட்டாமல் தனது பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவது தெரிந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எங்களை கேலி செய்கின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து கண்டன கோஷங்களை ஓ.பி.எஸ், தினகரன் எழுப்ப, அதனை தொண்டர்கள் மீண்டும் கூறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

    • அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
    • திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே தனக்கென ஒரு பாதை அமைத்து, இந்திய விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கிய இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளான வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் சண்முகம், தங்கராஜ் மற்றும் காமராஜ், மாரப்பன், கோவிந்தன், சுப்பிரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இதில் திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
    • இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.

    நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×