search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "DTV Dhinakaran"

  • கூட்டத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் ஜி. செந்தமிழன் முன்னிலை வகித்தார்.
  • தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து பிரசாரங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

  போரூர்:

  சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் இன்று நடந்தது.

  இதையொட்டி வானகரம் முழுவதும் அ.ம.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்கள், பேனர்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.

  பொதுக்குழு கூட்டத்துக்கு அ.ம.மு.க.பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை வகித்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  அதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

  இந்த கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் அழைப்பிதழுடன் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் ஜி. செந்தமிழன் முன்னிலை வகித்தார்.

  அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை தேர்வு செய்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தலைவராக கோபால், துணை தலைவராக முன்னாள் எம்.பி.அன்பழகன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

  பெரியார், அண்ணா எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வழிகாட்டுதலில் தொடர்ந்து பணியாற்றுவோம்.

  கழக மாணவர் அணி, மாணவியர் அணி உருவாக்கம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கழகத்தின் 6-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றுதல், குக்கர் சின்னம் வரைந்து விளம்பரப்படுத்துதல், மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குதல் மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து பிரசாரங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மேம்போக்காகக் கையாள்வதற்கும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கும் தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை மற்றும் சுங்கக் கட்டணத்தைக் குறைத்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டிட வலியுறுத்தல், விவசாயத்தைப் பாதிக்கும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தையும், என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத் திட்டத்தையும் கைவிடுக என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  இதில் துணைத்தலைவர் எஸ்.அன்பழகன்,சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயலாளர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர்கள் வி.சுகுமார்பாபு, அம்பத்தூர் எஸ்.வேதாச்சலம், திருவள்ளூர் லக்கிமுருகன், சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, பி.ஆனந்தன், முகமது சித்திக், கே.விதுபாலன் மற்றும் நிர்வாகிகள் கிரித ரன், நசீர்கான் தட்சிணா மூர்த்தி, குட்வில்குமார், எஸ்.கே.கோவிந்தசாமி, பி.விஜயகுமார், புதூர் எம்.சரவணன், எஸ்.செல்வன், எஸ்.வெங்கடேசன், எஸ்.மூர்த்தி, வி.ஜே.குமார், டி.சக்கரபாணி, முகவை ஜெயராமன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
  • இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

  தேனி:

  கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

  தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

  ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

  எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

  ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.

  நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
  • தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

  தேனி:

  கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

  தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

  தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.

  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி கோட்டக்குப்பம் நகர மன்ற அலுவலக எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.ம.மு.க.பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பதவி சண்டையால் கட்சி யாருக்கு சொந்தம் என்று நீதிமன்ற வரை சென்றுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் தீய சக்தி என தி.மு.க.வை அடையாளம் காட்ட வேண்டும்.

  புதுச்சேரி:

  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி கோட்டக்குப்பம் நகர மன்ற அலுவலக எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.ம.மு.க.பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், அ.ம.மு.க. துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான செந்தமிழன், துணை பொது செயலாளர் ரங்கசாமி, கட்சியின் அமைப்பு செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் முத்துக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பதவி சண்டையால் கட்சி யாருக்கு சொந்தம் என்று நீதிமன்ற வரை சென்றுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் தீய சக்தி என தி.மு.க.வை அடையாளம் காட்ட வேண்டும்.

  தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு வருடம் ஆகின்ற நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓர் அணி திரள வேண்டும்.

  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.ம.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சியின் சின்னம் இருப்பதால் அ.தி.மு.க உண்மையாகி விடாது. ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்ற உண்மையான இயக்கம் அ.ம.மு.க. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜனநாயக அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.

  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வேலியே பயிரை மேய்வது போல் செயல்படும் கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு விவகாரத்தில் கவர்னர் அரசியல் செய்கிறார்.

  மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு அமைதி பூங்காவன தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் கவர்னரை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  ×