என் மலர்
நீங்கள் தேடியது "Robbery case"
- சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கினை தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஏற்கனவே ஒரு முறை விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர்.
அதனை ஏற்று இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சயான் விசாரணைக்கு ஆஜரானானர். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
- தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
தேனி:
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
- இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.
தேனி:
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.
ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.
நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக பாஜக பிரமுகர் விஜயகுமார் புகார் அளித்தார்.
- இந்த கொள்ளை வழக்கில் அன்பரசன் என்பவரை காவல்துறை கைது செய்தது.
நேற்று முன்தினம் பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கோவை அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.18.5 லட்சம் ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆனால் விஜயகுமார் தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக தெரிவித்தால் அவரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், கொள்ளை தொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் தொகையை குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அன்பரசன் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பொய்யான புகாரை கூறி போலீசாரை அலைக்கழித்தாக பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
- அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன்
- இவர் மீது கொலைமுயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
நெல்லை:
அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன் (வயது26). இவர் மீது கொலைமுயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
இவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவருக்கு ஆழ்வார்குறிச்சி பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் அம்பை கோர்ட்டு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து உள்ளது. இதற்கிடையே வடிவேல் மணிகண்டன் கடந்த 4 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வடிவேல் மணிகண்டனை கைது செய்து ஆஜர்படுத்த அம்பை கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து இனஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.
- 16 வயது சிறுவன் வீட்டின் மொட்டை மாடி வழியாக கீழே இறங்கி வீட்டிற்குள் புகுந்தான்
- நகை-பணத்தை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர்புரம் சந்தைப்பேட்டை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். அவரது அம்மா மட்டும் வீட்டை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று அவரும் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கம்பம் சுருளிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் அவரது வீட்டின் மொட்டை மாடி வழியாக கீழே இறங்கி வீட்டிற்குள் புகுந்தார்.
பின்னர் பீேராவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரொக்க பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற முயன்றார். அந்த நேரத்தில் ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவி வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்பினர்.
தங்கள் வீட்டில் நகை, பணம் திருடி வெளியே வந்த சிறுவனை கையும் களவுமாக பிடித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுவனை கைது செய்து அவனிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 1½ பவுன் மதிப்புள்ள 2 மோதிரங்களை பறித்துச் சென்றனர்.
- பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
சென்னையைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் சம்பவத்தன்று இரவு திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 1½ பவுன் மதிப்புள்ள 2 மோதிரங்களை பறித்துச் சென்றனர். இதுகுறித்து குருசாமி திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி, டவுன் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர்வாசு, குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன், ஏட்டுகள் ஜார்ஜ் எட்வர்ட், ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் மகன் குருவி சரவணன் (வயது 37), ஏர்போர்ட் நகரைச் சேர்ந்த குட்லி பிரபு (33) ஆகிய 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோதிரம், 4 செல்போன்கள், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- நீதிபதி சத்யநாராயணன் உத்தரவின்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
- இந்நிலையில் வேலூரில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி மன்னாா் முதலி தெருவில் வசிக்கும் சரவணன் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் தீபக் உள்பட 2 பேரை கத்திமுனையில் கட்டிபோட்டுவிட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக சையது ரியாஸ் (22) என்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். அதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை இல்லாத பட்டதாரி நண்பர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை பெரியார் நகர், ஆழ்வார் திருநகர் அண்ணா சாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் (21), அவரது நண்பரான கிஷோர் கண்ணன் (23) ஆகிய இருவரும் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதி சத்யநாராயணன் உத்தரவின்படி இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வேலூரில் தலைமறைவாக இருந்த தினேஷ், சந்தோஷ் ஆகிய மேலும் இருவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்படி, துணை சூப்பிரண்டு சகாயஜோஸ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து, போலீஸ்காரர்கள் செல்வக்குமார், பரமசிவம், சிவக்குமார், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படையும், காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார்கள் சிவபாலன், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் காந்திநகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரை சோதனை செய்தபோது அதில் 6 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து 6 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது.
இதன் அடிப்படையில் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் கஞ்சநாயக்கன்பட்டி கோபிகண்ணன் (வயது 30), ராஜபாளையம் சம்பத் குமார் (51), திருமங்கலம் மகேஸ்வர்மா (27), அஜய்சரவணன் (29), மதுரையைச் சேர்ந்த அலெக்ஸ்குமார் (36), மூர்த்தி (34) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த கார் தான் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ரூ.88 ஆயிரம், 2 பவுன் தங்க நகை, கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஏட்டு இளங்குமரன் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.
அவர் கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தான் கணேசன் வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்து விட்டதால் கணேசன் தனியாக வசிப்பதை அறிந்த இளங்குமரன், தனது சகோதரர் சம்பத்குமாரிடம் தெரிவித்து கும்பலாக வந்தால் நகை, பணம் கொள்ளையடிக்கலாம் என திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
அதன் பேரில் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான சம்பத்குமார் உள்பட 6 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ஏட்டு இளங்குமரனை தேடி வருகின்றனர்.
கைதான அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தது.
மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). டாக்டரான இவர் கடந்த 6-ந் தேதி நடைபயிற்சி சென்றிருந்தபோது. அவரது வீட்டினுள் புகுந்த கும்பல் அவரது மனைவி மீரா (62) மற்றும் வேலைக்கார பெண், காவலாளி ஆகியோரை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் சூர்யா, கணபதி, ஹரிவிக்னேஷ் என இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிலரை தேடிவந்த நிலையில் மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்த மணிராஜ், சிவகுமார், செல்வகுமார் ஆகியோரை இன்று மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ், இன்ஸ்பெக்டர் ஜேசு ஆகியோர் கைது செய்தனர். இதுவரை இந்த கொள்ளை வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சேர்மானநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 40). இவர் நேற்று மதியம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சைக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். பஸ் வண்டிக்காரத்தெரு பாலத்தில் வந்தபோது அந்த பஸ்சில் பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த சித்ரா (32). என்பவர் கோமதி வைத்திருந்த மணிபர்சை நைசாக திருடிக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்க முயன்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி கூச்சல் போடவே டிரைவர் விஜய் பஸ்சை நிறுத்தி விட்டார். மற்ற பயணிகள் சித்ராவை பிடிக்க முயன்றபோது அவர் பயணிகளை தள்ளிவிட்டு கீழே இறங்கி ஓடிச்சென்று அந்த வழியாக சென்ற மற்றொரு பஸ்சை நிறுத்தி அதில் ஏறி சென்றார். அதனை பார்த்த டிரைவர் விஜய் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று நிறுத்தினார். பின்னர் அந்த பஸ்சில் இருந்த சித்ராவை பிடித்தனர்.
இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசாரிடம் சித்ராவை ஒப்படைத்தனர். போலீசார் சித்ராவிடம் விசாரணை செய்தபோது அவர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை, பணம் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கோமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சித்ராவை கைது அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் மணிபர்சை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம். தனியார் பால் நிறுவன உரிமையாளர். வியாபாரத்தை விரிவுபடுத்த இவருக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது.
அதற்காக சிலரை அணுகிய போது பாங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சென்னை வரவழைத்தனர். பட்டினபாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் 3 பேர் அவரை சந்தித்து பேசினர். அப்போது கடன்பெற்று தர ரூ.1 கோடி தேவைப்படும் என கூறி அதை பெற்றுக் கொண்டனர்.
காரில் வந்த அவர்கள் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.
பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மோகன சுந்தரம் போலீசில் புகார் செய்தார். அதைதொடர்ந்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொள்ளை கும்பலுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.






