என் மலர்

  நீங்கள் தேடியது "three arrested"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அருகே பொது இடத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  கரூர்:

  கரூர் அருகே சணப்பிரட்டி செல்லும் ரோட்டில் தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர்கள் ஒன்று கூடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக பசுதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

  அப்போது, சிலர் பொது இடத்தில் மேஜை போட்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், எஸ்.வெள்ளாளப்பட்டி தொழிற்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), நல்லப்ப நகரை சேர்ந்த அசோக் ஆனந்த் (31), தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (28) என்பது தெரியவந்தது. மணிகண்டனின் பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினோம் என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

  இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நீளமான பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதாக மணிகண்டன், அசோக் ஆனந்த், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சணப்பிரட்டியை சேர்ந்த அசோக் மற்றும் முழியன் என்ற சதானந்தம், தொழிற்பேட்டை நல்லப்ப நகரை சேர்ந்த பாலன், பசுபதிபாளையம் பாரதி நகரை சேர்ந்த பழம் ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதை மணிகண்டனின் நண்பர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

  அந்த வீடியோவில், பொது இடத்தில் மேஜை போட்டு கேக்கில் மெழுகுவர்த்தி தயாராக இருக்கிறது. அதனை ஊதி அணைக்கின்றனர். பின்னர் வெட்டுடா மச்சான்... என நண்பர்கள் குரல் எழுப்ப, அந்த கேக் பட்டாக்கத்தியால் வெட்டப்படுகிறது. பின்னர் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

  கரூரில் பட்டாக்கத்தியால் இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது பசுபதிபாளையத்தில் 3 வழக்குகளும், கரூர் டவுன் போலீசில் ஒரு வழக்கும் உள்ளன. கார்த்திக் மீது மதுபாட்டில் விற்றதாக ஒரு வழக்கு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி செய்ததாக, டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #DelhiPolice #PlottersHeld
  புதுடெல்லி:

  குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு படை போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

  விசாரணையில் அவர்களில் ஒருவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வாலி முகமது என்பது தெரியவந்தது. மற்றவர்கள் டெல்லி மதாங்கிர் பகுதியைச் சேர்ந்த ஷேக் ரியாஜுதீன், கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முத்தாசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

  இவர்கள் மூவரும் சேர்ந்து தென்னிந்தியாவில் உள்ள ஒரு சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #DelhiPolice #PlottersHeld 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேலூர் டாக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
  மேலூர்:

  மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). டாக்டரான இவர் கடந்த 6-ந் தேதி நடைபயிற்சி சென்றிருந்தபோது. அவரது வீட்டினுள் புகுந்த கும்பல் அவரது மனைவி மீரா (62) மற்றும் வேலைக்கார பெண், காவலாளி ஆகியோரை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது.

  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்தனர்.

  இதில் முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் சூர்யா, கணபதி, ஹரிவிக்னேஷ் என இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

  இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிலரை தேடிவந்த நிலையில் மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்த மணிராஜ், சிவகுமார், செல்வகுமார் ஆகியோரை இன்று மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ், இன்ஸ்பெக்டர் ஜேசு ஆகியோர் கைது செய்தனர். இதுவரை இந்த கொள்ளை வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் 44 கிலோ கஞ்சா கடத்திய 2 பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கும்மிடிபூண்டி:

  கும்மிடிபூண்டியை அடுத்த எலாவூரில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது.

  இந்த வழியாக வரும் வாகனங்களை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை வந்த பஸ்சிலும் சோதனை நடந்தது.

  அப்போது 3 பேரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 22 கஞ்சா பொட்டலங்களில் மொத்தம் 44 கிலோ கஞ்சா இருந்தது.

  விசாரணையில் 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்தது தெரிய வந்தது.

  அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் பெண்கள் ஒருவர் தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா (45).

  இன்னொரு பெண் தஞ்சையை சேர்ந்த பாண்டியம்மா (38). இவர்களுடன் ராசி (23) என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். இவரும் தஞ்சையை சேர்ந்தவர். கைதான 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோவிலூரில் குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  திருக்கோவிலூர்:

  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி(30). இவர்களுக்கு கமலேஸ்வரன்(7), விஷ்ணுப்பிரியன்(4) மற்றும் ருத்திரன் என்கிற 4 மாத கைக்குழந்தையும் இருந்தது.

  இளங்கோவன் தனது குடும்பத்துடன் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10-ந்தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

  இதில் மனமுடைந்த தனலட்சுமி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது 3 குழந்தைகளுடன் கீழக்கொண்டூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து விட்டார்.

  இந்தநிலையில் தனலட்சுமி, அவரது குழந்தைகள் கமலேஸ்வரன், விஷ்ணுப்பிரியன், ருத்திரன் ஆகிய 4 பேரும் அங்குள்ள குடிசை வீட்டில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளங்கோவன் தினசரி குடித்து விட்டு வந்து தனலட்சுமியை அடித்து, உதைத்து, பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியதாக தெரிந்தது.

  இதனால் தனலட்சுமி மாமனார் வீட்டுக்கு வந்து மாமனார் ராமசாமியிடமும், மாமியார் வேங்கையம்மாளிடமும் இளங்கோவன் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் இளங்கோவனை கண்டிக்காமல், தனலட்சுமிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதில் மனமுடைந்த தனலட்சுமி, தனது 3 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

  தனலட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகளின் சாவுக்கு காரணமான இளங்கோவன், வேங்கையம்மாள், ராமசாமி ஆகியோரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் இளங்கோவன், ராமசாமி, வேங்கையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடந்த தொடர் கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  பூந்தமல்லி:

  சென்னை அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் சில மாதங்களாக பங்களா வீடுகள், நகை கடைகளில் தொடர் கொள்ளைகள் நடந்து வந்தன. இதையடுத்து அண்ணா நகர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

  சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலை சேர்ந்த மணிகண்டன், திண்டுக்கல்லை சேர்ந்த கோபால், புதுச்சேரியை சேர்ந்த ரகு, மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3/4 கிலோ தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

  அவர்கள் அளித்த தகவலின் பேரில் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம், நாரையூரை சேர்ந்த தினகரன் (வயது 31), திருவாரூரை சேர்ந்த முருகன் உள்ளிட்ட சிலரை பிடிக்க அண்ணா துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் நெல்லையில் தினகரனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் நாகையை சேர்ந்த லோகநாதன் (52), காளிதாஸ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  அவர்களிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

  தினகரன், முருகன் ஆகியோர் கொள்ளை அடிக்கும் முன் வீட்டை முதலில் நோட்டமிடுவார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாதபோது ஒருவர் வீட்டின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே செல்வார். மற்றொருவர் வெளியே நின்று காவல் காப்பார். செல்போன் பயன்படுத்தினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் வாக்கி டாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

  வெளியில் இருக்கும் நடமாட்டங்களை வீட்டிற்குள் இருப்பவருக்கு வாக்கி டாக்கி மூலமே தகவலை கொடுப்பார். மாடி வீடுகளில் கொள்ளையடிக்க கயிறுகளை கையோடு எடுத்து செல்வார்கள். கொள்ளை அடித்த நகைகளை லோகநாதன், காளிதாசிடம் கொடுப்பார்கள். அவர்கள் அதை உருக்கி விற்று பணமாக மாற்றி கொடுத்து வந்தது மட்டுமல்லாமல் கொள்ளையர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து வந்தனர். அதற்காக குறிப்பிட்ட தொகையையும் பெற்றுள்ளனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோலார்பேட்டை அருகே டெய்லர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  ஜோலார்பேட்டை:

  ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 34). இவரை கடந்த ஆண்டு முன்விரோத தகராறில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

  இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுதீஷ் உள்பட 6 பேரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்தனர். பின்பு சுதீஷ் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

  இதற்கிடையே முனிராஜின் தம்பி கார்த்தி (24) கடந்த 10ந் தேதி நடந்த முனிராஜின் திதி வழிபாட்டின் போது அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குவதாக சபதம் எடுத்தார்.

  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுதீஷை கார்த்திக் உள்பட 5 பேர் கும்பல் வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சுதீஷை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுதீஷ் இறந்தார்.

  இது குறித்து ஜோலார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தி அவரது நண்பர் சிவா(27) ஆகியோரை கடந்த 17ந் தேதி கைது செய்தனர்.

  மேலும் தலைமறைவாக இருந்த நந்தகுமார் (23), சிலம்பரசன் (25), தங்கபாலு (24) ஆகிய 3 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள் உள்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #FakeATMCard
  புதுச்சேரி:

  ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மரை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து அவர்களது வங்கிகணக் கில் இருந்து பணத்தை ஒரு கும்பல் மோசடி செய்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

  இதில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்தன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்தியால்பேட்டையை சேர்ந்த சந்துருஜியை வலைவீசி தேடிவருகின்றனர். சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

  போலீசாரின் தீவிர விசாரணையில் சந்துருஜிக்கும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியை சேர்ந்த பீட்டர் (வயது 38) என்பவருக்கும் தொடர்பு இருப்பதும், இவர்தான் சந்துருஜியின் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. மரைன் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவருகிறார்.

  கோவையை சேர்ந்த பட்டதாரியான தினேஷ் (33) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் அழகுநிலையம் நடத்திவரும் இவரும், பீட்டரும் சந்துருஜியிடம் இருந்து ஸ்வைப்பிங் மெஷின்களை வாங்கி சட்டவிரோதமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

  மேலும் சென்னை கொளத்தூரை சேர்ந்த இர்பான் ரகுமான் (34) என்பவருக்கும் இந்த மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை வடபழனியில் விமான டிக்கெட் வாங்கித்தரும் ஏஜென்சி நடத்திவருகிறார். இந்த வழக்கில் இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  பீட்டரிடம் இருந்து ரூ.2 லட்சம், லேப்டாப் மற்றும் 5 ஏ.டி.எம். கார்டுகள், தினேஷிடமிருந்து சொகுசு கார் ஒன்றும், இர்பான் ரகுமானிடமிருந்து அதிநவீன சொகுசு கார் ஒன்றும், 4 லேப்டாப், 3 வங்கி காசோலை புத்தகங்கள், 2 வங்கி கணக்கு புத்தகம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி.

  கோவையிலும் இதேபோல போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், கிருஷ்ணகிரியில் ஒரு ஓட்டல் அருகில் ஏ.டி.எம். மோசடி கும்பலை சேர்ந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். கைதானவர்கள் விவரம் வருமாறு:-

  நவசாந்தன் (29), உத்தண்டி, சென்னை. இலங்கை திரிகோணமலையை சேர்ந்த இவர் இலங்கை அகதியாக வந்து தங்கியிருந்தார். நிரஞ்சன் (38), கானத்தூர், சென்னை. தமிழரசன் (26), வசீம் (30), இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கிஷோர் (25), திருச்சி, மனோகரன் (19), திருப்பூர் அனுப்பர்பாளையம்.

  அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கோவையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, வாடிக்கையாளர்களின் ரூ.19 லட்சத்தை சுருட்டியது தெரியவந்தது. இந்த கும்பல் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்று லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளனர்.

  கைதானவர்களில் சென்னையை சேர்ந்த நிரஞ்சன், நவசாந்தன் ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணர்கள். போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதில் இவர்கள் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு நவசாந்தன் மூளையாக செயல்பட்டுள்ளார். பி.எம்.டபிள்யூ. உள்பட சொகுசு கார்கள், 2 லேப்டாப், 17 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், 40 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 6 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவசாயியை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  சின்னசேலம்:

  விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29), விவசாயி. இவரது மனைவி ரஞ்சிதா (26). இவர்களுக்கு தனுஷ் (9) என்கிற மகனும், ஆர்த்தி (3) என்ற மகளும் உள்ளனர்.

  மணிகண்டன் நேற்று காலை தனது நிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த சிலர் இதுபற்றி சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சிதா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

  அப்போது ரஞ்சிதா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது கணவரை கள்ளக்காதலன் ஆறுமுகம் (43) மற்றும் 18 வயது சிறுவனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

  இதையடுத்து மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

  மணிகண்டன் தனது நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இதனால் ஆறுமுகத்துக்கும், மணிகண்டனின் மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தங்களது கள்ளக்காதலை வளர்த்துவந்தனர்.

  இவர்களது கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆறுமுகத்திடம் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தையும் மீட்டார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் ஆறுமுகத்துக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. மணிகண்டன், மனைவியை மீண்டும் கண்டித்ததால் அவரை தீர்த்துக்கட்ட ரஞ்சிதா முடிவு செய்தார்.

  அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிகண்டனுக்கு ரஞ்சிதா மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்தார். மணிகண்டன் அந்த மதுவை அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் தனது கள்ளக்காதலன் ஆறுமுகம், 18 வயது சிறுவன் ஆகியோரை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி மணிகண்டனை கொலை செய்தார். உடலை அவரது நிலத்தில் வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.

  இதையடுத்து ரஞ்சிதா, கள்ளக்காதலன் ஆறுமுகம் மற்றும் 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
  பழனி:

  பழனி பாரதிநகரைச் சேர்ந்த காளிமுத்துமகன் செந்தில்குமார் (வயது 38). நேற்று அடிவாரம் பகுதியில் தனது நண்பர்களுடன் ஒரு பாரில் மது குடிக்க சென்ற போது தகராறு ஏற்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

  இது தொடர்பாக பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பூபாலன், அவரது அண்ணன் கோபிநாத் துர்க்கா, சவுந்தரபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக பூபாலனின் தம்பி பாலன் என்பவரை தேடி வருகின்றனர்.

  இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், செந்தில்குமாரின் தம்பி பாரதிமோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2013-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பழனி அடிவாரத்தில் ஆட்டோ டிரைவர்கள் உதயகுமார், பாலாஜி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில்தான் தற்போது செந்தில்குமாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ டிரைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் செந்தில்குமார் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

  தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அவரை வெளியூரில் சென்று வசிக்குமாறு அவரது தாய் சாவித்திரி கூறினார். அதன் பேரில் தனது மனைவி திவ்யா (வயது 34), மகன் கருப்பணபாரதி (4) ஆகியோருடன் திண்டுக்கல்லில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தனது மகனுக்கு பிறந்தநாள் என்பதால் அவனை தாயிடம் அழைத்து வந்துள்ளார்.

  அதன் பிறகு நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மது குடிக்க செல்லும் போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் செந்தில்குமாருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாகத்தான் இந்த கொலை நடந்துள்ளது. தற்போது பூபாலனின் தம்பியை தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.