மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்ற னர்.

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள அரசு பள்ளி முன்பு கஞ்சா விற்பதாக அவனியாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்கு வில்லாபுரம் பத்மா தியேட்டர் காலனியை சேர்ந்த பாலமணி (வயது 34), கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த கோவிந்தன் (35), அவரது தாய் முத்துகாளி ஆகியோர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.

இதில் பாலமணி, கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய முத்துகாளியை போலீசார் தேடிவருகின்றனர். இவர்களிடம் இருந்து 1.200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை எஸ்.ஆலங்குளம்- குளமங்கலம் சாலையில் உள்ள பழைய டாஸ்மாக் கடை முன்பு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த தங்க ராஜை கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com