வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்று கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன் இவர் மீது கொலைமுயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்று கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Published on

நெல்லை:

அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன் (வயது26). இவர் மீது கொலைமுயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

இவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவருக்கு ஆழ்வார்குறிச்சி பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் அம்பை கோர்ட்டு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து உள்ளது. இதற்கிடையே வடிவேல் மணிகண்டன் கடந்த 4 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வடிவேல் மணிகண்டனை கைது செய்து ஆஜர்படுத்த அம்பை கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து இனஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com