போடி அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த சிறுவன் கைது

16 வயது சிறுவன் வீட்டின் மொட்டை மாடி வழியாக கீழே இறங்கி வீட்டிற்குள் புகுந்தான் நகை-பணத்தை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர்புரம் சந்தைப்பேட்டை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். அவரது அம்மா மட்டும் வீட்டை கவனித்து வந்தார்.

சம்பவத்தன்று அவரும் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கம்பம் சுருளிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் அவரது வீட்டின் மொட்டை மாடி வழியாக கீழே இறங்கி வீட்டிற்குள் புகுந்தார்.

பின்னர் பீேராவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரொக்க பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற முயன்றார். அந்த நேரத்தில் ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவி வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்பினர்.

தங்கள் வீட்டில் நகை, பணம் திருடி வெளியே வந்த சிறுவனை கையும் களவுமாக பிடித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுவனை கைது செய்து அவனிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com