search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasumpon"

    • இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.

    அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.

    பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #ThevarJayanthi #EdappadiPalaniswami #OPS
    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் தேவரின் ஆன்மீக விழாவும் 2-ம் நாளில் அரசியல் விழாவும் நடைபெற்றது.

    3-வது நாளான இன்று (30-ந் தேதி) குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

    அதன் பின்னர் அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய முக்குலத்தோர் பாசறை தலைவர் சிற்றரசு தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனத்தலைவர் மூர்த்தி தலைமையில் 500 பேர் ஊர்வலமாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    தென்நாட்டு மக்கள் கட்சித்தலைவர் கணேசன் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது. கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், தூத்துக்குடி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் காளிமுத்து மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது.



    முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #ThevarJayanthi #EdappadiPalaniswami #OPS

    ×