search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரே நாடு ஒரே தேர்தல்"

    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும்.

    பாராளுமன்ற மக்களவை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசலீத்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்களிடம் இந்த குழு ஆலோசனைகளை பெற்று வருகிறது.

    இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். எனவே மூன்று முறை மட்டுமே அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இரண்டு வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்" எனக் கூறினார்.

    • ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே மிச்சமாகும்.

    நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்தும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அது தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க முடியாது, மேலும் கட்சித் தாவல் எதிர்ப்பை தீவிரமாக ஊக்குவிக்கும் என்று ஆம் ஆத்மி கூறியது.

    இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பாராளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி அரசியல் ஆகியவற்றின் கருத்தை சேதப்படுத்தும்.

    தொங்கு சட்டசபையை சமாளிக்க முடியாமல், கட்சித் தாவல் எதிர்ப்பு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்கும் நிலைமை இருக்கும். அது தீவிரமாக ஊக்குவிக்கும்.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் செலவு மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே.

    "குறுகிய நிதி ஆதாயங்கள்" மற்றும் நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை தியாகம் செய்ய முடியாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும்.
    • தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம்.

    ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது

    உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசனை.
    • சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு அமைப்பு.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு ஒவ்வொரு கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், அவர் அந்த கடிதத்தில் "1952-ம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலுடன் மாநில தேர்தல்களும் இணைந்து நடத்தப்பட்டன. சில வருடங்களுக்கு இது நீடித்தது. ஆனால், இந்த கூட்டுத் தேர்தல் பின்னர் சிதைந்து விட்டது.

    இந்த கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வருந்துகிறேன். இதுதொடர்பான உங்களுடைய உருவாக்கம் மற்றும் பரிந்துரையுடன் நாங்கள் உடன்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் இல்லாதது (மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல்) இந்திய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படை கட்டமைப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை பெறப்பட்டு வருகிறது.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சட்ட ஆணையத்தின் கருத்தையும் உயர்மட்டக் குழு கேட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக் குழு இரு முறை கூடி ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகள் வழங்கும்படி கேட்டுக்கொண்டது.

    இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வரும் 15-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என உயர்மட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் குறித்த சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை அனுப்பும்படி கூறியிருந்தது. அதன்படி பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அனுப்பிவருகின்றனர்.

    இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு இதுவரை 5,000 ஆலோசனைகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சட்ட ஆணையத்தின் கருத்தையும் உயர்மட்டக் குழு கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டக் குழுவை மீண்டும் அழைத்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

    பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை https://onoe.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, se-hlc@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே.சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்திருந்தார்.

    பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டின் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூட்டணி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

    • தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம்.
    • வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.

    நாமக்கல்:

    ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பில் விவாதம், தொகுப்புரை, அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன.

    மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். அதற்குப் பின்னர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்படும்.

    தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமைத்தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

    இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

    • ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குழு அமைப்பு
    • ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

    பா.ஜனதா ''ஒரே நாடு ஒரே தேர்தல்'' என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

    இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தல் நாளை கொண்டாட முடியாது என பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:-

    நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகள் நாடுகள் முழுவதும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. ஆகவே, தேர்தல் நாளை நாம் ஏன் ஒன்றாக கொண்டாட முடியாது.

    பெண்களுக்கான அதிகாரத்தை குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்துள்ளது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.
    • இதில் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.

    இதைச் செயல்படுத்தக் குறைந்தது 5 அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பா.ஜ.க.வில் போதிய அளவில் எம்.பி.க்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்.

    இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

    • ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு 8 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல், மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாத பொருளாகவே நீடிக்கும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் ஜி-20 மாநாடு நடந்து வருகிறது. 2 நாடுகளின் தலைவர்கள் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு குடியரசு தலைவர் அளித்த விருந்திற்கு அழைப்பு வராதது வருத்தமளிக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. விவாத பொருளாகவே நீடிக்கும். இதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பாராளு மன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை உள்ளதால் அது கனவாகவே நீடிக்கும்.

    வெவ்வேறு கொள்கை களை கொண்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்திருப்பது மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றுவதற்காகதான். ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

    அரசியலமைப்புச் சட்டத்திலேயே இந்தியா, பாரதம் என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை கேட்டவுடன் பாரதம் என்று பேச ஆரம்பித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் பால கிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம், சிவஞான புரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரங்கபாளையம், லட்சுமி நாராயணபுரம், கம்மாபட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும்
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். இதுதான் எங்கள் பணி

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தலைவர் ராஜிவ் குமார் இன்று மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.

    மத்திய பிரதேசம் சென்றுள்ள அவர் தேர்தல் குறித்து கூறுகையில் ''அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதுதான் எங்களது பணி. பாராளுமன்ற பதவிக்காலம் ஐந்தாண்டு. நாங்கள் ஆறு மாதத்திற்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும். அதேபோன்றுதான் சட்டமன்ற தேர்தலுக்கும். சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

    ×