search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்திவைப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சியினர் சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறை யினர் தற்காலிகமாக சீல் வைத்தனர்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் இதை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்து வதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

    பின்னர் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.

    இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார்.

    இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
    • 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆடி பண்டிகையொட்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது, அடுத்த வாரம் 11ந் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் ஏலம் நடைபெறும் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.
    • அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால் நடவடிக்கை.

    விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 4 தினங்களாக முடக்கி இருந்தன. விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று மதியம் 12 மணக்கு சபை கூடியதும், எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    அனுப்பா்பாளையம் - சோளிபாளையம் சாலைப் பணி தொடங்கப்படவுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    இது குறித்து 15.வேலம்பாளையம் நகரச்செயலாளா் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் நகரப்பகுதியில் அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலும், வேலம்பாளையம் முதல் தண்ணீா்ப்பந்தல் வரையிலும் இதர வாா்டுகளில்உள்ள பல சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு, பல மாதங்களாக குண்டும்குழியுமாகக் கிடக்கின்றன.இதனால், அப்பகுதியில் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் ரூ.87 லட்சத்தில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று மேயா் தினேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை எதிர்த்து அண்ணாகிராம ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் பணிகளை பேக்கேஜ் டெண்டர் மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பெருமளவு நிதி ஊராட்சி மன்றங்களுக்கு சேர வேண்டிய தொகையாகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது அரசே அதிகாரிகள் மூலம் பேக்கேஜ் டெண்டர் விடுவதால் ஊரட்சி மன்றங்களின் உரிமை பறிபோவதாக ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த திட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே உள்ளனர்.எனவே அரசு வெளியிட்டுள்ள அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும்,ஊராட்சி மன்றங்கள் மூலமாகவே டெண்டர் விட உத்தரவிட கோரியும் கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்குவந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதி சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் கடலூர் கலெக்டர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை வருகிற 21-ந் தேதிக்கு அன்று தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.

    ×