வெள்ளகோவிலில் ஆடி பண்டிகையொட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏலம் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆடி பண்டிகையொட்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது, அடுத்த வாரம் 11ந் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் ஏலம் நடைபெறும் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com