search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்குமுறை விற்பனை கூடம்"

    • 1,329 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • ஒரு கிலோ ரூ. 41.04 முதல் ரூ. 47.59 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 28.33 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    வேடசந்தூா், காவல்பட்டி, நடுப்பட்டி, ஆத்தூா், புங்கம்பாடி, நெல்லிக்கோம்பை, மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 77 விவசாயிகள் தங்களுடைய 1,329 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 65 ஆயிரத்து 608 கிலோ. ஈரோடு, காரமடை, சித்தோடு, நடுப்பாளையம், பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ. 41.04 முதல் ரூ. 47.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 44.44. கடந்த வார சராசரி விலை ரூ. 45.19. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 28.33 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • 3 விவசாயிகள் 57 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.59க்கும் ஏலம்போனது

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.28 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 57 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 2, 905 கிலோ.இதில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.59க்கும், சராசரியாக ரூ.79க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.28 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    • தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
    • 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ள நிலையில் விவசாயிகள் கொப்பரை உற்பத்தி களங்கள் அமைத்து கொப்பரை உற்பத்தி செய்தும், தேங்காயை நேரடியாக விற்பனை செய்தும் வருகின்றனர்.மூன்று வட்டாரத்திலும் 300க்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் செயல்பட்ட நிலையில் விலை குறைந்ததால் பெரும்பாலான களங்கள் மூடப்பட்டும், தேங்காய்க்கு விலை இல்லாததால் தோப்புகளில் தேங்கியும் வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காதது, கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்து கிலோ 80 முதல் 85 வரை மட்டுமே விற்று வருவது, உப பொருட்களாக மட்டை, தொட்டி என அனைத்தும் விலை சரிவு ஏற்பட்டுள்ள தோடு நோய் தாக்குதல், இடு பொருட்கள் விலை உயர்வு என தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    அதிலும் வியாபாரிகள் சிண்டிகேட், உணவு எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களி னால் கொப்பரை விலை அபரிமிதமான சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் நேபட் நிறுவன த்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உடுமலை மற்றும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் இன்று முதல் செயல்படுகின்றன.

    உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 4 ஆயிரம் டன் சாதாரண கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடம், அரசு கொப்பரை கொள்முதல் மையத்தின் வாயிலாக 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளிடமிருந்து சாதாரண கொப்பரை கிலோ ரூ.108.60க்கும், பந்து கொப்பரை ரூ.117.50க்கும் கொள்முதல் செய்யப்படு கிறது.கொள்முதல் செய்ய ப்படும் கொப்பரைக்கு உரிய தொகையை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- உடுமலை, பெதப்ப ம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரசு கொப்பரை கொள்மு தல் மையங்கள் செயல்பட தொடங்கியு ள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்ப ரையை இம்மையங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இதற்கான பதிவு தொடங்கியு ள்ளது. போட்டோ, ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தகம் நகல், கூட்டுபட்டாவாக இருந்தால் வி.ஏ.ஓ., உரிமை சான்று இருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமாரை 94439 62834 என்ற எண்ணிலும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மாரியப்பனை 96772 24564 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா கூறியதாவது:- திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதோடு கொள்முதல் செய்யப்படும் விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    வேளாண் விளைப்பொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது விளைபொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை பாதுகாப்பாக இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையில் கிடங்கு வசதியும் உள்ளது.கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டமன்றத்தில் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதில் கலசப்பாக்கம் தொகுதி ஆதமங்கலம்புதூர், கீழ்பென்னாத்தூர் தொகுதி நாயுடுமங்கலம் ஆகிய 2 கிராமங்களின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணனிடமும் தமிழக அரசின் சார்பில் ஆதமங்கலம்புதூர், நாயுடுமங்கலம் பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிரந்தரமாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் நிரந்தர ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவையென கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனடிப்படையில் சட்டமன்றத்தில் 4 மாவட்டங்களில் ஆறு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைப்பதற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெனத்தூர் தொகுதிக்குட்பட்ட நாயுடுமங்கலம் பகுதியிலும் கலச ப்பாக்கம் தொகுதி க்குட்பட்ட ஆதமங்கல ம்புதூரிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைய சட்டமன்றத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆதமங்கலம்புதூரிலும் நாயுடுமங்கலத்திலும் விவசாயிகளும் பொதுமக்களும் துணை சபாநாயகருக்கும் எம்எல்ஏவுக்கும் நன்றியை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது.
    • குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது.

    தாராபுரம் :

    தாராபுரம், அலங்கியம், தளவாண்பட்டிணம், சந்திராபுரம், கொங்கூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை நடக்கிறது. மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்கிறார்கள்.

    அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். திருப்பூர், திண்டுக்கல், பழனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளத்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். மக்காச்சோளம் மொத்தம் 19 ஆயிரம் கிலோ அளவில் இருந்தது. அதனை வாங்க மேற்கூறிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2,211-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2,202-க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 23 ஆயிரத்துக்கு மக்காச்சோளம் ஏலம்போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பெ.அருள்குமார் செய்திருந்தார்.

    • கலெக்டர் தகவல்
    • 3,360 டன் கொள்முதல் செய்ய இலக்கு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் போளூர் ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வருகிற மே மாதம் 29-ந்தேதி வரை ராபி 2022-23-ம் ஆண்டிற்கு பருவத்திற்கு உளுந்து கொள் முதல் செய்யப்பட உள்ளது.

    மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.66- க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒரு ஏக்கருக்கு 370 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,360 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத் தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உளுந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முன்பக்கம், சிட்டா, அடங் கல் ஆகியவற்றின் நகலுடன் திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.
    • 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, உளுந்து, பச்சைபயறு ஆகியவற்றை, விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது. பயறு வகைகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான, உளுந்து கிலோ ரூ.66; பச்சைப் பயறு கிலோ, ரூ.77.55க்கு, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    'நடப்பு ராபி பருவத்தில், திருப்பூர், கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில், 60 ஆயிரத்து, 203 டன் உளுந்து கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தபட்சமாக ரூ.68க்கும் ஏலம்போனது.

    காங்கேயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 569 கிலோ. இதில், கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தப ட்சமாக ரூ.68க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.40 ஆயிரம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்."

    • அறுவடை துவங்கி காய வைப்பதற்காக உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களுக்கு வரத்து துவங்கியுள்ளது.
    • விவசாயிகள் மல்லியை இருப்பு வைக்க தேவையான குடோன் வசதி, உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ளது

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக களிமண் விளைநிலங்களில் கொத்தமல்லி மற்றும் கொண்டைக்கடலை பிரத்யேகமாக இப்பகுதியில் சாகுபடியாகிறது.அந்தியூர், கணபதிபாளையம், முக்கூடுஜல்லிபட்டி, பண்ணைக்கிணறு, வெனசப்பட்டி, ராகல்பாவி சுற்றுப்பகுதிகளில் அறுவடை துவங்கி காய வைப்பதற்காக உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட உலர்களங்களுக்கு வரத்து துவங்கியுள்ளது.

    இதே போல் குடிமங்கலம் வட்டாரத்தில் அறுவடை செய்யப்படும் கொத்தமல்லி, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.கொத்தமல்லி தழை தேவைக்காக இல்லாமல் தானியங்களுக்காக சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 90-120 நாட்களில் அறுவடை துவங்குகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கொத்தமல்லி சாகுபடியில் அதிக மழை காரணமாக, செடியின் வளர்ச்சியிலும் பூ விடுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு ஏக்கருக்கு 40 கிலோ கொண்ட 15 மூட்டை விளைச்சல் இருக்கும்.நடப்பு சீசனில் பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பிட்ட நாட்கள் காய வைத்து ஈரப்பதம் குறைந்த பிறகே கொத்தமல்லியை விற்பனை செய்ய முடியும். இந்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

    ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், மானாவாரி கொத்தமல்லி சாகுபடியில், அறுவடை துவங்கி உலர்களங்களுக்கு வரத்து துவங்கியுள்ளது. விவசாயிகள் மல்லியை இருப்பு வைக்க தேவையான குடோன் வசதி, உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றனர்.

    • விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.12,269-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9,550-க்கும், சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 9169 மூட்டைகள், குவிண்டால் 2976.84, மதிப்பு ரூ.3 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 869 ஆகும். இந்த மறைமுக ஏலத்தில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
    • 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆடி பண்டிகையொட்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது, அடுத்த வாரம் 11ந் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் ஏலம் நடைபெறும் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ×