காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை

ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தபட்சமாக ரூ.68க்கும் ஏலம்போனது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கேயம் :

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 569 கிலோ. இதில், கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தப ட்சமாக ரூ.68க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.40 ஆயிரம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்."

X

Maalai Malar
www.maalaimalar.com