search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "copra coconut"

    • தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
    • 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ள நிலையில் விவசாயிகள் கொப்பரை உற்பத்தி களங்கள் அமைத்து கொப்பரை உற்பத்தி செய்தும், தேங்காயை நேரடியாக விற்பனை செய்தும் வருகின்றனர்.மூன்று வட்டாரத்திலும் 300க்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் செயல்பட்ட நிலையில் விலை குறைந்ததால் பெரும்பாலான களங்கள் மூடப்பட்டும், தேங்காய்க்கு விலை இல்லாததால் தோப்புகளில் தேங்கியும் வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காதது, கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்து கிலோ 80 முதல் 85 வரை மட்டுமே விற்று வருவது, உப பொருட்களாக மட்டை, தொட்டி என அனைத்தும் விலை சரிவு ஏற்பட்டுள்ள தோடு நோய் தாக்குதல், இடு பொருட்கள் விலை உயர்வு என தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    அதிலும் வியாபாரிகள் சிண்டிகேட், உணவு எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களி னால் கொப்பரை விலை அபரிமிதமான சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் நேபட் நிறுவன த்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உடுமலை மற்றும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் இன்று முதல் செயல்படுகின்றன.

    உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 4 ஆயிரம் டன் சாதாரண கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடம், அரசு கொப்பரை கொள்முதல் மையத்தின் வாயிலாக 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளிடமிருந்து சாதாரண கொப்பரை கிலோ ரூ.108.60க்கும், பந்து கொப்பரை ரூ.117.50க்கும் கொள்முதல் செய்யப்படு கிறது.கொள்முதல் செய்ய ப்படும் கொப்பரைக்கு உரிய தொகையை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- உடுமலை, பெதப்ப ம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரசு கொப்பரை கொள்மு தல் மையங்கள் செயல்பட தொடங்கியு ள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்ப ரையை இம்மையங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இதற்கான பதிவு தொடங்கியு ள்ளது. போட்டோ, ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தகம் நகல், கூட்டுபட்டாவாக இருந்தால் வி.ஏ.ஓ., உரிமை சான்று இருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமாரை 94439 62834 என்ற எண்ணிலும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மாரியப்பனை 96772 24564 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 32 ஆயிரத்து735கிலோ தேங்காய்பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.83.65க்கும், குறைந்தபட்சம் ரூ.60.60க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய்பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்தஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், இந்த வாரம் செவ்வாய்கி ழமை 82 விவசாயிகள் கலந்து கொண்டு 32 ஆயிரத்து735கிலோ தேங்காய்பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 13வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகப ட்சமாக ரூ. 83.65க்கும், குறைந்தபட்சம் ரூ.60.60க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.24லட்சத்து 4ஆயிரத்து 580க்கு வணிகம் நடை பெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • கோடை வெயில் அதிகரித்துள்ளதால் கொப்பரை உற்பத்திக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
    • வெளிமாநில வியாபாரிகளுடன் போட்டி போட்டு தேங்காய்களை கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது.

    காங்கயம் :

    தற்போது தேங்காய் சீசன் துவங்கியுள்ளது. கோடை வெயில் அதிகரி த்துள்ளதால் கொப்பரை உற்பத்திக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ கொப்பரை 76 ரூபாய்க்கு விலை போகிறது. வெளிச் சந்தையில் கொப்ப ரை மார்க்கெட் சரிந்துள்ள தாலும், அரசு கொள்முதல் துவங்க உள்ளதாலும் விவசாயிகள் தேங்காய்க ளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

    உணவு மற்றும் தேங்காய் பவுடர் தயாரிப்பு ஆகிய தேவைகளுக்கு தேங்காய் அதிக அளவில் விற்பனை ஆகிறது. எனவே கொப்ப ரை தயாரிப்பா ளர்கள் வாங்கும் விலையை விட வெளிமாநில வியாபாரிகள் தேங்காய்க்கு கூடுதல் விலை கொடுக்கின்றனர்.கொப்பரை தயாரிப்பா ளர்கள் வெளி மாநில வியாபாரிகளுடன் போட்டி போட்டு தேங்காய்களை கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் கொப்பரை உற்பத்தி தொழில் மந்தக தியில் நடக்கிறது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உலர்கள உரிமை யாளர்கள் கூறுகையில், கொப்பரை விலையுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு தேங்காயும் 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை ஆகிறது.தொழிலாள ர்களுக்கு வேலை கொடுத்து அவர்க ளை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிறிய அளவில் கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.இதே நிலை நீடித்தால் கொப்பரை உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்படும் என்றனர். 

    • 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
    • 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 15,900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் விளைவித்த அரவை கொப்பரை, பந்து கொப்பரை ஆகியவற்றை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்பட உள்ளன. இந்த மையங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு அரவை கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50 வீதம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை விற்பனைக்குழு அலுவலகத்தை 0421 2213304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குறைந்த பட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மூலம் 1000 டன் அரவைக் கொப்பரை ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிலோவிற்கு ரூ.105 என்ற விலையில் இதுவரை 6500 கிலோ தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்து ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 350 விற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    கொப்பரை கொள்முதல் பணி ஜூலை 31-ந்தேதி முடிய உள்ளது. தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 96778 44623 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

    ×