என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 28.33 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
  X

  வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்ற காட்சி.

  வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 28.33 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1,329 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
  • ஒரு கிலோ ரூ. 41.04 முதல் ரூ. 47.59 வரை விற்பனையானது.

  வெள்ளகோவில் :

  வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 28.33 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

  வேடசந்தூா், காவல்பட்டி, நடுப்பட்டி, ஆத்தூா், புங்கம்பாடி, நெல்லிக்கோம்பை, மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 77 விவசாயிகள் தங்களுடைய 1,329 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 65 ஆயிரத்து 608 கிலோ. ஈரோடு, காரமடை, சித்தோடு, நடுப்பாளையம், பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

  ஒரு கிலோ ரூ. 41.04 முதல் ரூ. 47.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 44.44. கடந்த வார சராசரி விலை ரூ. 45.19. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 28.33 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

  Next Story
  ×