என் மலர்

  நீங்கள் தேடியது "hearing"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்கள் பெறப்பட்டது.
  • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

  தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசா ரணை செய்துஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்டஅலுவல ர்களுக்கு வழங்க ப்பட்டு ள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்த ப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

  இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபு த்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புதிட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து த்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  கடலூர்:

  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை எதிர்த்து அண்ணாகிராம ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

  இந்த திட்டத்தின் பணிகளை பேக்கேஜ் டெண்டர் மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பெருமளவு நிதி ஊராட்சி மன்றங்களுக்கு சேர வேண்டிய தொகையாகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது அரசே அதிகாரிகள் மூலம் பேக்கேஜ் டெண்டர் விடுவதால் ஊரட்சி மன்றங்களின் உரிமை பறிபோவதாக ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இந்த திட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே உள்ளனர்.எனவே அரசு வெளியிட்டுள்ள அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும்,ஊராட்சி மன்றங்கள் மூலமாகவே டெண்டர் விட உத்தரவிட கோரியும் கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்குவந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதி சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் கடலூர் கலெக்டர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை வருகிற 21-ந் தேதிக்கு அன்று தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது. #AyodhyaCase #SupremeCourt
  புதுடெல்லி:

  அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு முன் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

  ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

  முன்னதாக கடந்த 10-ந் தேதி இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி யு.யு.லலித், வழக்கில் இருந்து விலகிக்கொண்டார். எனவே புதிய அமர்வு அமைப்பதற்காக இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

  பின்னர் மற்றொரு நீதிபதி என்.வி.ரமணாவும் அமர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய அமர்வு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.  #AyodhyaCase #SupremeCourt 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை 10-ம் தேதி முதல் 5 பேர் கொண்ட புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase
  புதுடெல்லி:

  உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 
   
  இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரஷூட் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.

  இந்த புதிய அமர்வு வரும் 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #SC #AyodhyaCase 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செம்மஞ்சேரியில் கோர்ட்டு விசாரணைக்கு பயந்து கொலை வழக்கு குற்றவாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  சோழிங்கநல்லூர்:

  சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வம்(வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது.

  செம்மஞ்சேரியில் 7 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் செல்வம் 4-வது குற்றவாளி ஆவார். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

  இந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை அடைந்து விட்டதால் கோர்ட்டு என்ன தண்டனை வழங்குமோ? என செல்வம் பயந்தபடி இருந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென செல்வம், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்மஞ்சேரி போலீசார், தற்கொலை செய்த செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு விசாரணைக்கு பயந்து செல்வம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது. அப்போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணை அறிக்கையை பரிசீலிக்கும். #SupremeCourt #CBI #AlokVerma
  புதுடெல்லி:

  மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யில் அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டம் அடைந்தபோது, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. 2 பேரின் அதிகாரத்தையும் ஒரே நாளில் பறித்து, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

  கடந்த மாதம் 23-ந் தேதி எடுக்கப்பட்ட மத்திய அரசின் இந்த முடிவால் அதிர்ச்சிக்குள்ளான அலோக் வர்மா, அந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டார்.

  அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அவசர வழக்காக சென்ற மாதம் 26-ந் தேதி விசாரித்தது.  அப்போது, அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், முதல் கட்ட விசாரணையை 2 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும், இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

  மேலும், சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் முக்கிய முடிவுகளையோ, எந்த விதமான கொள்கை முடிவுகளையோ எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

  அத்துடன் நாகேஸ்வரராவ் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் எடுத்துள்ள முடிவுகளை (விசாரணைகள் மாற்றம், விசாரணை அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்டவை) மூடி முத்திரையிட்ட உறையில் நவம்பர் மாதம் 12-ந் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியது.

  இந்த உத்தரவுகளை தொடர்ந்து கே.வி.சவுத்ரி தலைமையிலான 3 உறுப்பினர்களை கொண்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், அலோக் வர்மாவிடம் விசாரணை நடத்தியது.

  ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் அடிப்படையில், மத்திய மந்திரிசபை செயலாளரின் ஆகஸ்டு 24-ந் தேதியிட்ட கடிதத்தின் (குறிப்பின்) படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு அலோக் வர்மா விரிவான விளக்கம் அளித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

  இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்த உள்ளது. அப்போது தாக்கல் செய்யப்படுகிற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையை நீதிபதிகள் பரிசீலிப்பார்கள்.

  சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து அது தொடர்பான உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பிப்பார்கள்.

  இதற்கிடையே சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக பின்னர் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ‘காமன்காஸ்’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள கன்னியாஸ்திரி கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #Jalandharbishop
  கொச்சி:

  கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

  இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் போராடி வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது.

  இதற்கிடையே கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி 3 பேர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதில் ஒரு மனுதாரர் கோரி இருந்தார்.

  இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை வெளியிட்ட நீதிபதிகள், பேராயரிடம் 19-ந் தேதி போலீசார் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அறிவித்தனர்.

  இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால், விசாரணைக்கு சிலகாலம் பிடிக்கும் எனவும் தெரிவித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையை 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

  முன்னதாக இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து போலீசார் தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.  #Jalandharbishop
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை செய்கிறது. #AIADMK #DelhiHighCourt
  புதுடெல்லி:

  அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் கமிஷன் வழங்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சார்பில் செம்மலை தரப்பு வக்கீல் ஆஜர் ஆனார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

  இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் டெல்லி ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #AIADMK #DelhiHighCourt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓரினச் சேர்க்கையை குற்றமாக குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் 377-வது சட்டப்பிரிவு விவாகரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. #wisdomofSC #validityofSection377 #Section377
  புதுடெல்லி:

  ஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அம்மனுக்களை விசாரித்து வருகிறது.

  377-வது சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கே விட்டு விடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது பிரமாண மனுவில் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு எங்கள் முடிவுக்கு விட்டு விட்டாலும், 377-வது சட்டப்பிரிவின் செல்லும்தன்மையை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.

  மேலும், 377-வது பிரிவை நீக்கும்போது, ஓரின சேர்க்கையாளர்கள் மீதான சமூக களங்கமும், பாரபட்சமும் அகலும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணையை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #wisdomofSC #validityofSection377 #Section377 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது. #TwoLeavesSymbol #DelhiHighCourt
  புதுடெல்லி:

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.  டி.டி.வி.தினகரன் தரப்பில் கோர்ட்டில் நேற்று ஆஜரான அவருடைய வக்கீல் மீனாட்சி அரோரா தன்னுடைய வாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற வழக்கு தேர்தல் கமிஷனில் நடைபெற்று வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களில் பல போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள் மீது தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் கமிஷனின் இந்த அணுகுமுறை சட்டவிரோதமானது என்றார். 7 நாட்கள் நடந்த இவர்களின் வாதம் நிறைவடைந்தது.

  இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தை தொடங்கினார். வாதம் தொடங்கிய சிறிது நேரத்தில், இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து வாதம் நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

  வழக்கு விசாரணையின் போது அமைச்சர் சி.வி.சண்முகம் கோர்ட்டில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்து கொண்டிருந்தார்.

  இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

  டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருடைய ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

  டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு கோரியதை ஏற்று, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பதிவு மீதான இறுதி வாதம் ஜூலை 17-ந் தேதி என்று அறிவித்த நீதிபதி, அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.  #TwoLeavesSymbol #DelhiHighCourt
  ×