search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் பயனாளிக்கு பணி நியமன ஆணை: கள்ளக்குறிச்சி கலெக்டர் வழங்கினார்
    X

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பெண்பயனாளி ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் பயனாளிக்கு பணி நியமன ஆணை: கள்ளக்குறிச்சி கலெக்டர் வழங்கினார்

    • காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
    • மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்டன.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து 31 மனுக்களும்என மொத்தம் 546 மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப் பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்ட லம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி 1 கிலோ மீட்டர் முட்டி போட்டுக் கொண்டு12.36 நிமிடத்தில் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து, வேல்ட் புக் ஆப்ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனை விருது வழங்கியதை தொடர்ந்து, மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    சின்னசேலம் வட்டம் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா 14.9.2021 அன்று ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவரால் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டு இறந்ததை தொடர்ந்து, அவருடைய மனை விபிரியா வுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995 திருத்தவிதிகள் 2016 பிரிவு 46(1)ன் கீழ் மேல்வாழப்பாடி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி யில் காலியாக உள்ள சமை யலர் பணிக்கான ஆணை யினையும், மாற்றுத்திற னாளிநலத்துறை சார்பில் செவித்திறன் குறை யுடை யோருக்கு காதொலி கருவி 3 ேபர்களுக்கு தலா ரூ.4ஆயிரம் மதிப்பீட்டிலும் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) விஜயராக வன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணைகலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    Next Story
    ×