நெல்லிக்குப்பத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

சினேகா கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெல்லிக்குப்பத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

கடலூர்:

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் சினேகா (வயது 21). பட்டதாரி. இவருக்கு கடந்த சில வருடங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியினை தாங்க முடியாமல் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்ட சினோகா தீ வைத்துக் கொண்டார்.

அப்போது சினேகாவில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்றனர். அங்கு தீயில் கருகிய நிலையில் இருந்த சினேகாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி சினேகா நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com