search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து

    சென்னை:

    தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஆர்டலி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆர்டலி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    ஆர்டலி விவகாரத்தில் முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயே ஆர்டலி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆர்டலி ஒழிப்பு முறையை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட நேரிடும், என்றும் நீதிபதி எச்சரித்தார்.

    • அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள அரசே யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது?
    • 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும்.

    வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள அரசே யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது? இனி தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா, டாஸ்மானியா நாடுகளைத் தாயகமாகக் கொண்ட யூக்கலிப்டஸ் மரங்கள் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரை தானே உறிஞ்சி எடுத்து கொள்வதுடன், நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நீரையும் கணிசமாக குறைத்து விடுவது குறிப்பிடத்தக்கது

    • பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
    • டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    சென்னை:

    திருவள்ளூர் டி.எஸ்.பி. காதர்பாஷா சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை பழிவாங்கும் நோக்கில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் காதர்பாஷா மனுத்தாக்கல் செய்தார்.

    சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காகவே தன்னை பொய் வழக்கில் கைது செய்ததாகவும், பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஏன் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது? என தமிழக அரசு இன்று விளக்கமளித்துள்ளது. #IdolTheftCase #CBI
    சென்னை:

    சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொன் மாணிக்க வேல் தனது விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

    தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டதை அடுத்து, ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்பட்டது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதிலை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளது.

    அதில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. டிஜிபி நடத்தும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் வருவது இல்லை. சிலை கடத்தல் முறைகேடில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளதால், நியாமான விசாரணை நடக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிர்பந்தத்தால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    சென்னை:

    சென்னை அருகே 15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்ததாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘குழந்தைகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று 2015-ம் ஆண்டு தெரிவித்தார்.

    இந்த உத்தரவை மத்திய அரசு முறையாக அமல்படுத்தவில்லை என மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று விசாரித்தார்.

    அப்போது, ‘குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வெளிநபர்கள் மட்டும் காரணம் அல்ல. பெற்றோரும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாயார் என்ன செய்துகொண்டு இருந்தார்? தன் மகளை கூட கவனிக்க முடியாதா? கூட்டுக்குடும்ப முறை ஒழிந்ததால், பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்றாகிவிட்டது. இதில் சில நன்மை இருந்தாலும், சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    மேலும், ‘விவாகரத்து பெற்றவர்களின் குழந்தை தாயிடம் மட்டுமோ அல்லது தந்தையிடம் மட்டுமோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. இருவருடனும் சேர்ந்து குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து, ‘குழந்தைகள் நலன் கருதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை, பெண்கள் நலத்துறை என்றும், குழந்தைகள் நலத்துறை என்றும் மத்திய அரசு இரண்டாக பிரித்தால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் மாரிமுத்து. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினரையும் குற்றவாளிகளாக சேர்த்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட செசன்சு கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்தும், தலா ரூ.5 லட்சம் பிணைத்தொகையுடன் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
    விபத்தில் உயிர் பலியை தவிர்க்க, ரெயிலில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி ரெயில்வே துறைக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் வக்கீல் கே.சதீஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே ஓடும் புறநகர் ரெயிலில் கடந்த 24-ந் தேதி காலையில் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணம் செய்தனர். இந்த ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த தடுப்புச்சுவரில், படியில் பயணம் செய்த பயணிகள் மோதினர். இதில், 5 பேர் பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. சென்னையில், மெட்ரோ ரெயிலும் இயக்கப்படுகிறது. இதில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த ரெயிலில் பயணிகள் ஏறியதும், தானியங்கி கதவும் மூடிவிடுகின்றன. அதன்பின்னரே ரெயில் இயக்கப்படுகிறது.

    அதுபோல, விபத்தில் உயிர் பலியை தவிர்க்க, புறநகர் ரெயில் மட்டுமல்லாமல், அனைத்து ரெயில்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்று கடந்த 24-ந் தேதி இந்திய ரெயில்வே துறையின் அமைச்சர், தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளர், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுவை அனுப்பினேன். இதுவரை அந்த மனுவை பரிசீலிக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய ரெயில்வே துறை செயலாளர், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஆகஸ்டு 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #DelhiHighCourt
    புதுடெல்லி:

    டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்ககோரி கோரிக்கை வந்தனர். பின்னர் அவர்களது கோரிக்கை நிறைவேறாததையடுத்து நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    பின்னர் இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஊதிய உயர்வு வழங்க கோரி டெல்லி மெட்ரோ ரெயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளது.

    மெட்ரோ ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை டெல்லி அரசு ஏற்கும் என அம்மாநில போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.
    பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பணி வழங்கக்கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் கலந்து கொண்டனர். 2011 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.

    இவர்களில் 196 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி தேர்வை ரத்து செய்தது.

    இதை எதிர்த்து தேர்வு எழுதிய சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘விரிவுரையாளர் தேர்வு முறைகேடு சம்பந்தமாக தமிழக அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளது. அதில், 196 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது சரியானது தான்’ என்று தீர்ப்பு கூறினார்.

    இதே போன்று மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘இந்த தேர்வில் 196 பேரின் மதிப்பெண்ணில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு பணி வழங்க வேண்டும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

    இந்த மாறுபட்ட தீர்ப்புகளை தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.


    அந்த மனுவில், ‘முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி மொத்தமாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு நடந்த தேர்வையே தமிழக அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. இந்த தேர்வில் 196 பேரின் மதிப்பெண் பட்டியலில் வித்தியாசம் உள்ளது என்பதற்காக தேர்ச்சி பெற்ற எங்களையும் மீண்டும் தேர்வு எழுதச்சொல்வதில் நியாயம் இல்லை. எனவே, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எங்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    நடப்பு ஆண்டிலும் ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதால், தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. #NEET #highcourt
    சென்னை:

    மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘நீட் தேர்வின் தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்பது உள்பட பல உத்தரவுகளை தமிழக அரசுக்கு பிறப்பித்து இருந்தார்.

    இந்நிலையில், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபாவும், திருச்சியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீயும் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வக்கீல் சூர்யபிரகாசம் ஆஜராகி, ‘நீட் தேர்வினால் கடந்த ஆண்டு அரியலூர் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதனால், நீட் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. அதனால், நடப்பு கல்வி ஆண்டிலும் மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். எனவே, ஐகோர்ட்டு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு தொடர்ந்தால் வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார். #NEET #NEET2018 #highcourt
    ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் வழக்கை தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. #Jayalalithaa #highcourt
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் ஜெயலலிதா இறப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் தேவையில்லாமல் வழக்கு தொடர்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதமாக ரூ.50 ஆயிரத்தை மாநில சட்டப்பணிகள் குழு ஆணையத்திற்கு வழங்க உத்தரவிட்டு மனுவை தள்ளுப்படி செய்தனர். #Jayalalithaa #highcourt
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் சடலங்கள் ஏற்கனவே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடலை ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 7 பேரின் உடலை மறுபரிசோதனை செய்தபோது பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்றி எவ்வளவு சீக்கிரம் உடற்கூறு பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    ×