search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏலம்"

    • காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

     முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 விவசாயிகள் 18 மூட்டைகள் (902 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.74 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.84-க்கும், குறைந்த பட்சமாக ரூ.60-க்கும், சராசரியாக ரூ.60- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சிக்கல்
    • நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படு கிறது.

    குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரி யில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதி யாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 26-ந்தேதி நடந்த கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பு உள்ள இடத்தில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான கவுன்சி லர்கள் ஆதரவு அளிக்க வில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சபரிமலை சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ப டவில்லை. இதனால் தற்போது கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கு வதற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பி னும் இந்த சீசன் கடைகளை ஏலம் எடுப்ப தற்காக இப்போதே வெளியூர் வியா பாரிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். ஆனால் வெளியூர் வியாபாரி களின் நிலை கேள்விக்குறி யாக தான் உள்ளது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது. பண்டிகை காரணமாக விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்திற்க்கு கொண்டுவரப்பட்டது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 8.52 குவிண்டால் எடை கொண்ட 2 ஆயிரத்து 635 தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.81-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.25.35-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் விற்பனையானது.

    அதேபோல் 175.05 குவிண்டால் எடை கொண்ட322-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.79-க்கும், சராசரி விலையாக ரூ.84.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் என விற்பனையானது. ஒரே நாளில் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 14 லட்சத்து 26 ஆயிரத்து 752-க்கு விற்பனையானது.

    • இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
    • மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ.7,119 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    • கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
    • ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது.

    இங்கு கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இந்த பகுதியில் பாண்டுகப்பா என்ற அரிய வகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும். இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக கிராக்கி உள்ளது.

    ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது. இந்த மீன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை ரத்தினம் என்பவர் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து வாங்கி சென்றார். 

    • போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
    • தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரிய குளம், உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.,

    இதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பு வோர் ரூ.1000 முன்பணம் செலுத்தி ஏலத்தேதிக்கு முன்பு ரசீது பெற்றுகொள்ள வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்ப வருக்கே வாகனங்கள் வழங்கப்படும்.

    ஏலம் கேட்பவர் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி சேர்த்து செலுத்த வேண்டும். வாகன ஏலம் மற்றும் உறுதிபடுத்தும் குழுவினரால் உறுதிசெய்யப்பட்ட பின்னரே பொருட்கள் ஏலதாரரரிடம் ஒப்படை க்கப்படும்.

    • எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.97 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுக்கு விற்பனையானது

    மொடக்குறிச்சி,

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 8 ஆயிரத்து 489 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 869 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.24.30 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ25.65 காசுகள், சராசரி விலையாக 25.25 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.97 ஆயிரத்து 744-க்கு விற்பனையாகின.

    • திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.
    • ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 694 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.

    ஏலத்தில் ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.7,176 வரை, கொட்டுரகம் (மட்ட ரகம்) ரூ.2,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

    • எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.36 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்

    மொடக்குறிச்சி.

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 9 ஆயிரத்து 671 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.09-க்கும், சராசரி விலையாக ரூ.24.17 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 340-க்கு விற்பனையாகின.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஏலத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளைபொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.இதன்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 17 ஆயிரத்து 637 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனை தொடர்ந்து டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது.இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.60-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.65-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 60 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.82.15-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.70-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 ஆயிரத்து 748 தேங்காய்களும், 18 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு 55 பைசாவும், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.20-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.

    மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 9 டன் அளவில் மொத்தம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 117-க்கு வேளாண் விளை பொருள்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
    • பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது.

    எடப்பாடி:

    எடப்பாடி நெடுங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது. இது போல் நடைபெற்ற தேங்காய் பருப்புகளுக்கான பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,485 முதல் 7,585 வரை வேலை போனது. 2-ம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.6,675 முதல் ரூ.7025 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் பருத்தி வணிகம் நடைபெற்றது.

    • விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

    அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    ×