என் மலர்
புதுச்சேரி

அரிய வகை மீன்
மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன்: ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம்
- கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
- ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது.
இங்கு கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இந்த பகுதியில் பாண்டுகப்பா என்ற அரிய வகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும். இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக கிராக்கி உள்ளது.
ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது. இந்த மீன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
இதனை ரத்தினம் என்பவர் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து வாங்கி சென்றார்.
Next Story






