ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்பட்ட லட்டு ரூ1.20 கோடிக்கு ஏலம்

விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்பட்ட லட்டு ரூ1.20 கோடிக்கு ஏலம்
Published on

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com