search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீசன் கடைகள்"

    • 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
    • கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசன் காலத்தில் கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கோவளம் ரோட்டில் இருந்து கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதியில் 73 சீசன் கடைகளும், கன்னியா குமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பு இருந்து காந்தி மண்டபம் முன்புஉள்ள முக்கோண பூங்கா சந்திப்பு வரை உள்ள மெயின் ரோட்டின் மேற்கு பகுதியில் 27 சீசன் கடைகளும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு பகுதியில் 23 சீசன் கடைகளும் ஆக மொத்தம் 123 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

    இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சிரஸ்தார் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகி யோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும் சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு கார் பார்க்கிங் வசதி கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி சிலுவைநகர் பகுதி மற்றும் சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் உள்ள கார் பார்க்கிங் இடம் ஆகிய இடங்களில் கட்டண கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவற்றை பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் சீசனையொட்டி ஏலம் மூலம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவருகிறது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை கட்டணம் வசூலிக்கும் உரிமை ரூ.22 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதனை மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். இந்த கார் பார்க்கிங் அருகில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை ஒற்றையால்விளையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    இதேபோல கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை சுக்குப்பாறை தேரிவிளையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சிக்கல்
    • நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படு கிறது.

    குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரி யில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதி யாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 26-ந்தேதி நடந்த கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பு உள்ள இடத்தில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான கவுன்சி லர்கள் ஆதரவு அளிக்க வில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சபரிமலை சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ப டவில்லை. இதனால் தற்போது கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கு வதற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பி னும் இந்த சீசன் கடைகளை ஏலம் எடுப்ப தற்காக இப்போதே வெளியூர் வியா பாரிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். ஆனால் வெளியூர் வியாபாரி களின் நிலை கேள்விக்குறி யாக தான் உள்ளது.

    • 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது
    • .கார் பார்க்கிங் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது.

    இந்த125 சீசன் கடை கள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தலைமையில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜய லட்சுமி, நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    சீசன் கடை ஏலம் எடுப்ப தற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில் மொத்தம் 47 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. இந்த 47 சீசன் கடைகளும் ரூ.33 லட்சத்து 55 ஆயிரத்து 10-க்கு ஏலம் போனது. மீதி உள்ள 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    முன்னதாக கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கான கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 பேர் பங்கேற்றனர். இறுதியாக சூரப்பள்ளத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரூ.20 லட்சத்து 22 ஆயிரத்து 222க்கு ஏலம் பிடித்தார். மேலும் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.1லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சீசன்கடைஏலத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்
    • இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்து மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    இந்த சீசன் கடை ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். ஏலம் எடுக்க சென்ற வியாபாரிகள் போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    • சிறப்புநிலை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.துணைத் தலைவர்ஜெனஸ்மைக்கேல், செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்வருமாறு:-

    கன்னியாகுமரி பேரூ ராட்சிக்கு உட்பட்ட கடற்கரைச் சாலையில் ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனை யொட்டி நவம்பர் மாதம் 20-ந்தேதி முதல் ஜனவரி 20-ந்தேதி வரையிலான 60 நாட்கள் சீசன் காலத்தில் தற்காலிக சீசன் கடைகள் அமைப்பது வழக்கம். இதன் மூலம் பேரூராட்சிக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது.

    இந்தநிலையில் 2019 -2022-ம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, 2020-ம் ஆண்டு முதல் கடைகள் ஏலம் விடக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பகுதியில் கடைகள் ஏலம் விடப்படவில்லை. இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டில் சீசன் கடைகளுக்கான பொது ஏலம் விடுவதற்கு ஆவன செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு கருத்துரு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி பேரூ ராட்சிக்குச் சொந்தமான சன்னதி தெரு சமுதாயக் கழிப்பிடத்தில் அமைந்து உள்ள செல்பேசி கோபு ரத்தை அகற்றி அந்த இடத்தில் புதிதாக காங்கி ரீட் கழிப்பிடம் மற்றும் குளியலறை அமைப்பதுஎன்றுமுடிவுசெய்யப்பட்டது. காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபம் அமைந்துஉள்ள பகுதிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பை பேரூராட்சிக்கு வழங்க மாவட்ட கலெக்டரைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட தீர்மா னங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், ஆனிரோஸ் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×