எடப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, தேங்காய் பருப்பு ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது.
எடப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, தேங்காய் பருப்பு ஏலம்
Published on

எடப்பாடி:

எடப்பாடி நெடுங்குளம் சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி மற்றும் தேங்காய் பருப்புகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. பொது ஏலத்தில் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.5,488 முதல் ரூ.7,342 வரை விற்பனையானது. இது போல் நடைபெற்ற தேங்காய் பருப்புகளுக்கான பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,485 முதல் 7,585 வரை வேலை போனது. 2-ம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.6,675 முதல் ரூ.7025 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் பருத்தி வணிகம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com