அவிநாசி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம்

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

அவிநாசி:

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ.7,119 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com