அவிநாசி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.14 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

அவிநாசி:

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 694 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருப்பூா், கோவை மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்தனா்.

ஏலத்தில் ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.7,176 வரை, கொட்டுரகம் (மட்ட ரகம்) ரூ.2,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.14.07 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com