search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்"

    • அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார்.
    • காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவரது மனைவி அமுதலட்சுமி (52). கடந்த 30 ஆண்டுகளாக அதே கிராமத்தில் அங்கன் வாடியில் அமுதலட்சுமி பணியாற்றி வந்தார். இந்நிலையில் அங்கன் வாடி தொடர்பான பணிக் காக உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு தனது கணவ ருடன் அமுதலட்சுமி மோட் டார் சைக்கிளில் சென்றார். அப்போது எலவனாசூர் கோட்டை அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிப்ப தற்காக மோட்டார் சைக்கி ளை நிறுத்தினர்.

    அமுதலட்சுமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்ததால், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அமுத லட்சுமியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக புதுவை மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுதலட்சுமி பரிதாபமாக நேற்று உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எலவனா சூர் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    • சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.

    இதுகுறித்து அந்த பிரிவின் மேலாளர் சரவணன் (39) என்பவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் டாலர் வைக்கப்பட்டு இருந்த பிரிவில் வேலை பார்க்கும் சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் டாலரை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்க டாலரை 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடமான கடையில் அடமானம் வைத்தது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட கார்த்திகை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிமுக நிர்வாகியின் டீசல் காரில் பங்க் ஊழியர் பெட்ரோல் நிரப்பினார்
    • கார் டிரைவர் பங்க் ஊழியருடன் வாக்குவாதத்ததால் பரபரப்பு நிலவியது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு செல்வதற்காக, இவரது காரில் டீசல் நிரப்புவதற்கு டிரைவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு ஊழியர், அந்த காரில் டீசலுக்கு பதிலாக பெட்ரோல் போட தொடங்கினார். இதை கவனித்த டிரைவர் சத்தம் போட்டதால், அவர் பெட்ரோல் போடுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.
    • போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே உறவினரான முகமது விபின்சன் (வயது 31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    உறவினர் என்பதால் சிறுமியின் வீட்டிற்கு முகமது விபின்சன் அடிக்கடி சென்று வந்தார். சிறுமியும் உறவினர் என்பதால் அவருடன் பேசி வந்தார்.

    இந்த நிலையில் முகமது விபின்சன் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மாணவி கண்டித்துள்ளார்.

    இருந்த போதிலும் அவர், மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இதனை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளார். இதனால் மாணவியும் தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு மாணவி, தனது தாயாருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.

    இதையடுத்து மறுநாள் காலை மாணவியிடம் அவரது தாயார் இரவில் ஏன் அப்படி சத்தம் போட்டாய் என்று கேட்டார். அதன்பின்னரே மாணவி தனக்கு நேர்ந்த அனைத்தையும் தாயிடம் தெரிவித்தார்.இதை கேட்டதும் அதிர்ச்சியான மாணவியின் தாய், சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், முகமது விபின்சன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலியை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 43 வயது வாலிபர்.

    இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் டாஸ்மாக் விற்பனையாளரு க்கு, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இந்த விவகாரம் டாஸ்மாக் விற்பனை மேலாளரின் மனைவிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்தபோதிலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணுடன் பேசி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் விற்பனையாளர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு அவரின் கள்ளக்காதலி வந்தார்.

    அவர் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு சத்தம் போட்டார். சத்தம் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளரும், அவரது மனைவியும் வெளியில் வந்த னர்.அப்போது இளம்பெண், டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவியை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசினார். இதை கேட்ட டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி அப்படி பேசாதே என்றார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தார்.

    ஆனால் இதனை கண்டு கொள்ளாமல், டாஸ்மாக் விற்பனையாளர், இளம்பெண்ணுடன் சேர்ந்து கொண்டு தனது மனைவியை பார்த்து உன்னால் என் வாழ்க்கையில் நிம்மதி போச்சு என தெரிவித்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் விலக்கி விட்டு காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாஸ்மாக் விற்பனையாளர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கியது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள இசலி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் சண்முகமுனீஸ்வரன் (வயது29). இவர் அருப்புக் கோட்டையிலுள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த வருடம் யோகிதா (26) என்பவருடன் திருமணமானது. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். இந்நிலை யில் நேற்று மாலை கரு மேகத்துடன் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    அப்போது சண்முக முனீஸ்வரன் புதியதாக கட்டிவரும் அவரது வீட்டு மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு வைத்து செட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    சண்முக முனீஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவி னர்கள் மின்னல் தாக்கி படுகாயமடைந்தவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே சண்முக முனீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.

    • ஓமலூர் அருேக கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் 37, இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள வட்டவிளை தேமாணூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 35), இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார்.இவரதுமனவைி சுபி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த சுனில்குமார், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என நினைத்துள்ளார். இதற்காக பலரிடம் பணம் கேட்டு வந்தார் ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் சுனில்குமார் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரை சாப்பிட வருமாறு மனைவி சுபி அழைத்துள்ளார். அப்போது, எலி மருந்து (விஷம்) சாப்பிட்டேன் என்று கூறிய சுனில்குமார் மயங்கி விழுந்தார். உடனே சுபி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சுனில்குமார், நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் அனும திக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுனில்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சுபி, திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

    • 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார்.
    • தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை.

    இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கையும் , களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

    சம்பவத்தன்று வருவாய் துறை அலுவலகத்துக்கு சென்ற சந்தன்சிங், பத்வாரி கஜேந்திர சிங்கிடம் ரூ. 4.500 லஞ்சம் கொடுப்பது போல கொடுத்தார், அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். போலீசாரை பார்த்ததும் பத்வாரி கஜேந்திர சிங் அதிர்ச்சி அடைந்தார். எங்கே தான் ஆதாரத்துடன் சிக்கி கொள்வோமோ என பயந்த அவர் லஞ்சம் வாங்கிய பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினார்

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை ஒரு தட்டில் வாந்தி எடுக்க வைத்தனர். அதில் அவர் விழுங்கிய பணம் கூழாகி வெளியில் வந்தது. பின்னர் அவரை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் தற்போது நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலியானார்.
    • 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 58). இவர் கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கூத்தியார்குண்டை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராம்குமார் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
    • நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் வசித்து வருபவர் முத்துப் பாண்டி (வயது 51).

    இவர் மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசேதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது மனைவி செல்வ குமாரி கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×