நாகர்கோவிலில் மின்வாரிய ஊழியர் திடீர் சாவு

மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
நாகர்கோவிலில் மின்வாரிய ஊழியர் திடீர் சாவு
Published on

கன்னியாகுமரி:

நாகர்கோவில் சரக்கல் விளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் வசித்து வருபவர் முத்துப் பாண்டி (வயது 51).

இவர் மின்வாரியத்தில் பாதை ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசேதித்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது மனைவி செல்வ குமாரி கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி உடலை பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com