search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி"

    • சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் பா.ம.க. கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வருகை தந்துள்ளனர். அந்தக் குழுவில் உள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடம் ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கீம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.

    ராமநாதபுரம் நகர் வெளியே புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    • நிகழ்ச்சியில் யூனியன் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
    • ஆலோசனை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள், தொழிலதிபர் மணிகண்டன், யூனியன் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து 32 கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் முதல்- அமைச்சரின் கிராம சாலை கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 தொழில்நுட்ப உதவி யாளர்கள் பணி நியமன ஆணையை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார்.

    • குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
    • குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இந்திய அரசமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை . எனவே 14 வயதுக்கு ட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.

    குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் . குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

    தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற என்னால் இயன்றவற்றை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இதில் பொது மேலாளர் முகமது நாசர், முதுநிலை துணை மேலாளர் கோவிந்தராஜன், முதன்மை தணிக்கை அலுவலர் சிவகுமார் மற்றும் துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.
    • மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.

    அப்போது அனைவரும், இந்திய குடிமகன், குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவ ணைப்போடு பராமரித்தி டுவேன்.

    மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படு த்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்.

    பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்றவற்றில் முதியோர்களுக்கு முன்னு ரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள் மற்றும் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

    முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் தலைமை தாங்கினார்.

    சுகாதார ஆய்வாளர் பரமநாதன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் மதுமிதா கலந்துகொண்டு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கினர்.

    இதில் பகுதி சுகாதார செவிலியர் பானுமதி, ஊராட்சி செயலர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    முடிவில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தைகளை கல்வி பயில வேண்டிய பருவத்தில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலும் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் குழந்தை ெதாழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

    உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் மகேஷ் (உற்பத்தி), துணை பொது மேலாளர்கள் ராதாகிருஷ்ணன் (பாதுகாப்பு), ஜெயக்குமார் (வனம்), முதுநிலை மேலாளர்கள் சிவக்குமார் (மனித வளம்), முத்துராமன் (காகித இயந்திரம்), பரமசிவம்(காகித இயந்திரம்) மற்றும் மேலாளர் வெங்கடேசன் (மனித வளம்) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைவரும் வாசித்து ஏற்றனா்.
    • கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அனைத்து அரசு துறை அலுவலா்களும் வாசித்து ஏற்றனா்.

    பின்னா், சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் குளோரி குணசீலி, குழந்தைகள் நலக் குழுத் தலைவா் உஷாநந்தினி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
    • ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

    இதன்படி பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.அவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு வகுப்புகளுக்குச்சென்றனர்.

    • உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது.
    • குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் மெஜஸ்டிக் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில், குழந்தைகள் நமக்கு தெய்வம் தந்த வரம், அவர்கள் எதிர்காலம் சிறக்க நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.அவர்களுக்கு நல்ல கல்வியை தரவேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

    மேலும் ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் போது எண்ணற்ற சாதனையாளர்களை இழக்கிறோம்.நாட்டின் எதிர்காலம் இருண்டு விடும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் விஜய், ராஜபிரபு, பூபதிராஜா ஆகியோர் தலைமையில் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் அனைவருக்கும் சமூகநீதி, குழந்தை தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர் :

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக குழந்தை தொழிலாளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தலைமையிலும், அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: 14 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எவ்வித பணியிலோ அல்லது தொழிலிலோ ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு மீறி அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும்.

    பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவறும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட பாடுபட வேண்டும், என்றார். மேலும் பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையிலும், மாவட்ட போலீசார் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.

    அரியலூர்,

    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்பை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன். தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் தேவேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் செந்தில்குமார், பாதுகாப்பு அலுவலர் ஜெ.செல்வராசு மற்றும் குழந்தைகள் இலவச உதவி மையம் 1098 உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. கல்வி இடை நிற்றலை தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளின் அடிப்ப டை உரிமைகள் குறித்தும், குழந்தைத் தொழி லாளர் முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழி லாளர் முறை எதிர்ப்புத் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கார்த்தி கேயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×