என் மலர்
உள்ளூர் செய்திகள்

யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்ட காட்சி.
ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
- நிகழ்ச்சியில் யூனியன் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
- ஆலோசனை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.
தென்காசி:
ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள், தொழிலதிபர் மணிகண்டன், யூனியன் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து 32 கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் முதல்- அமைச்சரின் கிராம சாலை கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 தொழில்நுட்ப உதவி யாளர்கள் பணி நியமன ஆணையை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார்.
Next Story






