search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seniors"

    • முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.
    • மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.

    அப்போது அனைவரும், இந்திய குடிமகன், குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவ ணைப்போடு பராமரித்தி டுவேன்.

    மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படு த்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்.

    பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்றவற்றில் முதியோர்களுக்கு முன்னு ரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள் மற்றும் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 321 பேர் கலந்துகொண்டு உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர்.
    • மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 13&வது ஆண்டு மூத்தோர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ ஓட்ட போட்டிகள், 5 கி.மீ. நடை போட்டி மற்றும் 80, 100, 110, 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித்தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நேற்று திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 321 பேர் கலந்துகொண்டு உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் சுப்பிரமணியம், விவேகானந்தா சேவா அறக்கட்டளை செயலாளர் ராமசாமி, திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பயணிகள் நலன் கருதி மீண்டும் காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியில் தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.
    • 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் கட்டண சலுகைகளை ரெயில்வே நிர்வாகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் மெய்ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பழனிவேல், அமைப்பாளர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாரதி நடராஜன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரும் 24ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள செகந்தராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்படுவதை பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த ரெயிலை தஞ்சாவூர் மார்க்கமாக திருப்பி விட வேண்டும் என தஞ்சை ரெயில் பயணிகள் சங்கம் முயற்சிப்பதை கண்டிக்கிறோம். செகந்திராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்பட இருக்கிற இந்த ரெயிலை பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும், இந்த வழித்தடத்தில் அகல ரெயில் பாதை மாற்றுவதற்கு முன் இயக்கப்பட்ட காரைக்குடி- சென்னை கம்பன் விரைவு ரெயிலை பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி மீண்டும் காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியில் தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் கட்டண சலுகைகளை ரெயில்வே நிர்வாகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், கதிர்காமம், சேகர், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ரெயில் பயணக் கட்டண சலுகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முதியோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தாளாளரும், வழக்கறிஞருமான சமூக ஆர்வலர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:-

    ரெயில் பயணக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால் முழு கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ரெயில் பயணத்துக்கான கட்டணத்தில் 58 வயதைக் கடந்த பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு 40 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டணச் சலுகை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

    சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கமான ரெயில் சேவைகளை கடந்த சில நாள்களாக ரெயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. ரெயில்களில் சமைத்த உணவுப் பொருள்களை விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணக் கட்டணத்துக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும். எடுக்கப்படாமல் இருப்பது மூத்த குடிமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே மத்திய அரசு ஏற்கனவே இருந்தபடி மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை பயணத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×