search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி"

    • முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமா னோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து, ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேருவதை நான் உறுதி செய்வேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    பல்வேறு வழியாக சென்று அறிஞர் அண்ணா மண்டபத்தில் பேரணி முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Saplings were planted in government school on Independence Day
    • தொடர்ந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் ஈச்சங்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நி லைப்பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தா மரை தலைமை தாங்கினார்.

    சங்க தலைவர் லயன் மனோஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் லயன் எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் வீரமணி வாழ்த்துரை வழங்கினார்.

    பின்னர், சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தொடர்ந்து, 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    பின்னர், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு 2 சீலிங் பேன்கள் வழங்கப்பட்டது.

    மாணவர்கள் நூலகத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக நூலகத்திற்கு 50 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    விழாவில் சங்க ஆலோசகர் லயன் ஸ்டாலின் பீட்டர் பாபு, செயலாளர் லயன் காயத்திரி, சங்க ஜி.எல்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் அமிர்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியில் சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமங்களான தங்கப்பழம் மருத்துவ கல்லூரி, தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி, தங்கப்பழம் சட்ட கல்லூரி, தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தங்கப்பழம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாசுதேவநல்லூரில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

    இதில் தங்கப்பழம் கல்வி குழுமங்களை சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷமிட்டும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியானது வாசுதேவநல்லூர் நகர மைய பகுதியில் நிறைவு பெற்றது. பேரணியில் எஸ். தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
    • உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துறை தலைவர்கள் ராஜாராம், தமிழ்மணி, ஜானகி, செந்தில்குமாரி, உதவி பேராசிரியர்கள் சீனிவாசன், உதயசூரியன், வெங்கடேஷ்குமார், ரமேஷ், ஸ்ரீராம், நிர்வாக அலுவர் சிங்காரம், கல்லுாரி மாணவ, மாணவிகள் போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.

    • போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    கடலூர்:

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இன்று காலை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் ஏ.ரூபியால் ராணி முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் தலைமை கல்வி அலுவலர் எஸ். பாலதண்டாயுதபாணி தலைமையில் துணை முதல்வர் எஸ்.அறிவழகன் உறுதிமொழி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இறுதியில் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் போதை பொருட்களின் தீங்குகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலையில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி அதிகாரிகள், அன்பு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பெருமாள், கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், தலைவர் சீனிவாசன், துணை முதல்வர் மஞ்சுளா மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது.
    • 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவையில் மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று அவிநாசி ரோடு பீளமேடு பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகர போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் உறுதிமொழியை முன்மொழிய அதனைத் தொடர்ந்து மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
    • கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கரூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கவுள்ளார். அதே நேரத்தில் கரூர் மாவட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பள்ளி மற்றும் கல்லுாரிகளில் போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம்' என்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல பேரணி, கருத்தரங்கம்,துண்டு பிரசுரங்கள் விநியோகம், சமூக வலைதள தகவல்கள், விளம்பர பதாகைகள் அமைப்பது விழிப்புணர்வுஇவற்றில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    • மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 'என் குப்பை எனது பொறுப்பு' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் சுதா, கணேஷ், வனிதா, சதீஷ், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும், மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.

    • அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தன்னலமற்ற சேவையை காமராஜர் செய்து அணைகள் பல கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி. ஆர்.நகர், செல்லம்நகர் மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியை தொடங்கி வைத்து கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசும்போது, 'தன்னலமற்ற சேவையை காமராஜர் வழங்கினார். அணைகள் கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார். அவரைப்போல் பொதுநல சேவையை மாணவ- மாணவிகள் செயல்படுத்த உறுதி ஏற்க வேண்டும்' என்றார். பின்னர் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தலைமை ஆசிரியர் மருதையப்பன், நிர்வாகிகள் சிட்டி பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, பொன் மருதாசலம், மாரிமுத்து, தமிழன், அய்யப்ப சேவா சங்க தலைவர் சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.
    • மாணவர்கள் அனைவரும் மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை தாங்கினார்.

    இதில் செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் உலக மக்கள் தொகை நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

    இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.

    மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    ×