search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு மருத்துவக் கல்லூரி"

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.
    • அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்கள் மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன.

    6326 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1768 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றி இடங்கள் நிரப்பப்பட்டன.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 606 மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்.

    மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 11-ந் தேதி மாலைக்குள் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 14-ந் தேதி மாலைக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். ஒரு சிலர் சேரவில்லை. மருத்துவ கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள், காலி இடங்கள் பற்றிய தகவல்களை மருத்துவ கல்வி ஆணையத்திற்கு தெரிவிக்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேராமல் இருப்பது வழக்கம். அந்த வகையில் உருவாகும் காலி இடங்கள் மற்றும் இடம் கிடைத்தவர்கள் வேறு காரணத்திற்காக மாறி செல்ல வசதியாக அந்த இடத்தை நிராகரித்து விட்டு செல்லவும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அதனை தேவையில்லை என்றால் விலகி செல்ல வருகிற 20-ந் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் 2-வது கட்ட அகில இந்திய கலந்தாய்வு முடிந்து இறுதி முடிவு நாளை வெளியாக உள்ளது. அதில் இடம் பெற்றவர்கள் மூலமும் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.

    இந்த இடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதே போல் பிற மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது. அதன் முழு விவரம் இன்று மாலை தெரிந்துவிடும்.

    • கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
    • உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துறை தலைவர்கள் ராஜாராம், தமிழ்மணி, ஜானகி, செந்தில்குமாரி, உதவி பேராசிரியர்கள் சீனிவாசன், உதயசூரியன், வெங்கடேஷ்குமார், ரமேஷ், ஸ்ரீராம், நிர்வாக அலுவர் சிங்காரம், கல்லுாரி மாணவ, மாணவிகள் போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.

    • கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கான அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இருக்கைகளை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

    இதன் காரணமாக கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தி.மு.க. அரசின் திறமையின்மையே இது போன்ற நிலைக்கு காரணம். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுமக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும், மருத்துவம் பயிலவிருக்கும் மாணவ, மாணவியரின் நலனையும் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுத்து, மருத்துவக் கல்லூரி களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2022-ம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. கல்லூரியில் 100 இடங்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
    • 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியுள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது . கடந்த 2020 ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2021 ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. கல்லூரியில் 100 இடங்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் 2 கட்ட கவுன்சிலிங் மூலம் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியுள்ளன.

    முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்க்கை பெற்றுள்ள மாணவ -மாணவிகளுக்கு வகுப்புகள் தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது மாணவ, மாணவிகளை வரவேற்ற பேராசிரியர்கள் அறிவுரையும் ஆலோசனையும் வழங்கினர்.

    இது குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். 14 இடங்கள் காலியாக உள்ளன. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் 2 கட்ட கவுன்சிலிங்கிற்கு பதிலாக, ஆண்டுக்கு 4 கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் கவுன்சிலிங் முழுவதும் நிறைவடைந்தும் மீதமுள்ள இடங்கள் நிரம்ப கூடும் என தெரிகிறது என்றனர்.

    • அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக மருத்துவமனை 5 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
    • காவிரி ஆற்றில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீரை குழாய் வழியாகக் கொண்டுவர வேண்டிய சூழல் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதியதாக மருத்துவமனை 5 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட 7 ஆழ்துளைக் கிணறுகளிலும் நீராதாரம் இல்லாததால், காவிரி ஆற்றில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீரை குழாய் வழியாகக் கொண்டுவர வேண்டிய சூழல் உள்ளது.

    இதற்காக ரூ.13 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு நீரை கொண்டு வருவதற்கான வழித்தடத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகிறது.

    இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் நீடிக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுமதி கிடைத்து விடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் நீரைக் கொண்டு வருவதற்கான பணிகள் நிறைவடைய மேலும் 6 மாதங்களாகி விடும். தற்போது நாமக்கல் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி 1½ லட்சம் லிட்டா் காவிரி நீரை மருத்துவமனை நிா்வாகம் பெற்று வருகிறது.

    மாணவா்கள் உடற்கூறாய்வுப் பயிற்சிக்காக நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு, மருத்துவக் கல்லூரியில் பேருந்துகள் இல்லாததால், மாணவா்களை அழைத்துச் செல்ல அரசு பேருந்துகளை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து நிா்வாகம் பயன்படுத்தி வருகிறது. மருத்துவக் கல்லூரி பயன்பாட்டுக்கென தனியாக பேருந்துகள் வழங்க வேண்டும் என்பது மாணவா்களின் கோரிக்கையாக உள்ளது.

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சாந்தாஅருள்மொழி கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி சென்ற ஆண்டு தொடங்கியபோது, 150 இடங்களை எதிா்பாா்த்த நிலையில் 100 இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியது. அந்த இடங்கள் முழுமையாக நிரம்பி மாணவா்கள் படித்து வருகின்றனா். 2-ம் ஆண்டாக, மாணவா் சோ்க்கைக்குத் தயாராக உள்ளோம்.

    மருத்துவக் கலந்தாய்வு முடிவடைந்து மாணவா்கள் சோ்வதற்கு அக்டோபா் அல்லது நவம்பா் மாதமாகி விடும். அதற்குள் தற்போது முதலாமாண்டு படித்து வரும் மாணவா்கள் பருவத் தோ்வுக்கு (செமஸ்டா்) தயாராகி விடுவா். ஜனவரியில் இத்தோ்வு நடைபெற வாய்ப்புள்ளது. முதலாம் ஆண்டு சேர உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன என்றாா்.

    ×