சிதம்பரம் வீனஸ் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சிதம்பரம் வீனஸ் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி  ஏற்கப்பட்டது.
சிதம்பரம் வீனஸ் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி  ஏற்கப்பட்டது.
Published on

கடலூர்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இன்று காலை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் ஏ.ரூபியால் ராணி முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தலைமை கல்வி அலுவலர் எஸ். பாலதண்டாயுதபாணி தலைமையில் துணை முதல்வர் எஸ்.அறிவழகன் உறுதிமொழி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இறுதியில் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் போதை பொருட்களின் தீங்குகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com