search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி திணிப்பு"

    • இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.



    பரமக்குடி நகர் பகுதியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில் 36 வார்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் இந்தி திணிப்பால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தெருக்களில் தி.மு.க.வினர் கொடிகளை ஏந்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த் மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராம சாலையில் போக லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் அவைத் தலைவர் அப்பாஸ் கனி பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் முதலூர் ரவி, மஞ்சூர் கனகராஜ், கலைச்செல்வி முன்னிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உறுப்பினர் தனிக்கொடி, ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்று நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

     


    • பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார்.
    • இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக பொதுக்கூட்டத்தை விளக்கியும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தஞ்சையில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார். இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என முழக்கங்கள் இட்டு அனைவருக்கும் வழங்கினார்.

    அன்னைத் தமிழை அரியணை ஏற்றி போற்றுவோம், ஆதிக்க இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர். இந்த நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் கரந்தை, கோட்டை, கீழவாசல் மற்றும் மருத்துவகல்லூரி பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் பொதுமக்களிடம் இது தொடர்பான துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும்.
    • தேவையில்லாமல் பா.ஜ.க., இந்தியை திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது மிகுந்த நகைப்பிற்குரியது.

    பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை திணித்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்தி திணிப்பிலிருந்து இந்தி பேசாத மக்களுக்கு அன்றைய பிரதமர் நேரு 60 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலும், தொடர்ந்து வந்த காங்கிரஸ் ஆட்சிகள் வழங்கிய சட்டப் பாதுகாப்பின்படியும் தான் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும். இதில் தேவையில்லாமல் பா.ஜ.க., இந்தியை திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாக கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.

    ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய கடலோர காவற்படை தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்குவதும் துப்பாக்கி சூடு நடத்துவதுமாக இருக்கிறது.
    • அண்மையில் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, இந்தியை அனைத்துத் தளங்களிலும் திணிப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகிறது.

    அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான தேசிய அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையானது இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமைகளை முற்றாக அழிக்கும் வகையில் உள்ளது. இது 'ஒரே தேசம்- ஒரே மொழி' எனும் இந்தியப் பன்மைத்துவத்திற்கு எதிரான மேலாதிக்கப் போக்காகும்.

    அடுத்து, இந்திய நாட்டை அண்டை நாடுகளின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, நமது நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், சீன ராணுவத்தின் அத்துமீறலை- ஆக்கிரமிப்பை வேடிக்கைப் பார்க்கிறது.

    அதேவேளையில், இந்திய கடலோர காவற்படை தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்குவதும் துப்பாக்கி சூடு நடத்துவதுமாக இருக்கிறது. அண்மையில் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர் 1-ந்தேதி சென்னையில் நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு அறை கூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
    • இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை இந்தியில் நடத்தவும், மத்திய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட பாராளுமன்ற குழுவின் முடிவை திரும்ப பெற கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தல்லாகுளம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் கூறுகையில், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.

    • இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும்.
    • இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் இன்று அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானம் குறித்து அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற குழுத் தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

    குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

    அந்த பரிந்துரைகளில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்க ளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

    இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

    இந்தியின் அடிப்படையில் நாட்டை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

    இப்படி ஆங்கிலத்தை புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக்கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்க கூடாது. நடைமுறைப்படுத்த கூடாது என பிரதமருக்கு கடந்த 16-ந்தேதி அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

    இந்த மாபெரும் அவையில் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழிபயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

    அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு தலைவரால் கடந்த 9.9.2022 அன்று ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டு உள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டு உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை இந்த பேரவை வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன்பிறகு இந்தி திணிப்புக்கு எதிரான தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    • மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மதுரை

    தமிழகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று (15-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மேலிடம் அறிவித்தது.

    அதன்படி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை (புறநகர்) தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி - மாணவரணி சார்பில் நடந்தஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் மற்றும் இளைஞரணி மாணவரணி அமைப்பா ளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்கிறார்
    • ஏராளமானவர்கள் கலந்து கொள்கின்றனர்

    ராணிப்பேட்டை:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம் எல் ஏ ஆகியோர் அறிவிப்பின்படி தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து நாளை சனிக்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சந்திரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நிர்வாகிகள் அசோகன், சுந்தரம், சிவானந்தம் உள்பட மாநில செயற்குழு பொதுக்குழு மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், மாவட்ட இளைஞர் அணி, மாணவரணி மற்றும் ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து அமைச்சர் காந்தி விடுத்துள்ள அறிக்கையில் நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அறிக்கை
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    நாகர்கோவில்:

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பான இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயருமான மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாநகரச் செயலாளர் ஆனந்த், இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து கிழக்கு மாவட்ட செய லாளரும் மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளைச்செயலா ளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×