search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi imposition"

    • சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

    சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பி பிரிவு தேர்வில் ஹிந்திக்கு 300க்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான அநீதி மீண்டும் தொடங்கியுள்ளது என்று சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

    அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்.

    பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள்.

    பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

    பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி & ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.

    இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.

    இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய உணவு பாதுகாப்பு அமைப்பின் அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், ஆவின் தயிர் பாக்கெட்களில் 'தஹி' என அச்சிடப்படாது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

    'ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்பதால் நடைமுறைப்படுத்த முடியாது' என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    'எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!' என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறி உள்ளார்.

    • பாளை ஜோதிபுரத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க மாநில அமைப்பு செய லாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார்.
    • ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் புகார் கொடுக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை ஜோதிபுரத்தில் சமீபத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாநில அமைப்பு செய லாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அவர் பேசிய போது, கவர்னரை பற்றியும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது நெல்லை மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்க வேண்டும் என்று நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயா சங்கர் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று ஆர்.எஸ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி தலைமையில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் குரு கண்ணன், நிர்வாகிகள் முருகன், செந்தில் முருகன், செந்தில் முத்துக்குமார், வை கோபால், சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது
    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோரின் ஆலோசனை படி 29-வது வார்டுக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையம், பாளையங்கோட்டை ரோடு, மீனாட்சிபுரம் உள்பட பல பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் 14-வது வார்டுக்குட்பட்ட வி.எம்.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடை பெற்றது.

    மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவாக்க பகுதிகளுக்கு ரூ.38.62 லட்சம் மதிப்பீட்டில் மின் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.5 கோடி மதிப்பில் மாநகர பகுதிக்கு புதிதாக 1050 மின் கம்பங்கள், மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாக துறைக்கு ஒப்புதல் கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது.

    பருவமழை

    வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.இதில் சுழற்சி முறை யில் பணியாளர்கள் ஈடுபடு வார்கள். மேலும் 1800 420 420 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிய மாநகராட்சி பகுதியில் விரைவில் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, கிட்டு, பவுல்ராஜ், சந்திரசேகர், முத்துலெட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், ரவீந்தர், கருப்பசாமி கோட்டையப்பன், உலகநாதன் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்தும், புகார்கள் குறித்தும் பேசினர். பெரும்பாலானவர்கள் சாலைகளில் மாடுகள், நாய் உள்ளிட்டவைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் உள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க கோரியும், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகளுக்கு பொருத்தப்படும் மீட்டர்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்தனர்.

    பின்னர் மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
    • இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை இந்தியில் நடத்தவும், மத்திய அரசின் அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தியை கொண்டு வருவதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட பாராளுமன்ற குழுவின் முடிவை திரும்ப பெற கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தல்லாகுளம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தி திணிப்புக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் கூறுகையில், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.

    • நெல்லை வக்கீல்கள் தமிழ் மன்றம் சார்பில் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆந்திர மாநிலம் சுங்கச் சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், ஆந்திர மாநிலம் சுங்கச் சாவடியில் தமிழக மாணவர்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெல்லை வக்கீல்கள் தமிழ் மன்றம் சார்பில் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வக்கீல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் வக்கீல்கள் சுதர்சன், செந்தில்குமார், அப்துல் ஜப்பார், ரமேஷ், இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய உள்துறை அலுவல் மொழி தொடர் பான நாடாளுமன்ற குழு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டா யமாக இந்தி மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைத்து இருக்கிறது.

    இது தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக கொண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும். எனவே இதனை திரும்ப பெற வழியுறுத்தியும், ஒரே பொதுத்தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம். எனவே இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றனர்.

    • நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர்.
    • முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, பொறியாளா் ஜெயபிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதித்தனர். பின்னா் அ.தி.மு.க. உறுப்பினா்கள் ஜெகன், முத்துப்பாண்டி, தி.மு.க. உறுப்பினா்கள் ரஹீம், இசக்கித்துரைபாண்டியன் ஆகியோர் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டிடத்தில் நிரந்தர காங்கிரீட் மேற்கூரை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பணிகளை நிறுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

    அதனைத்தொடா்ந்து தி.மு.க. உறுப்பினா் ரஹீம் தலைமையில் அக்கட்சியின் கவுன்சிலர்கள் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனா். பின்னா் கூட்டம் முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. உறுப்பினா்கள் நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமையில் நகராட்சி அலுவலக வளாகம் முன்பு முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதானதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா்.



    • இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    இந்தியாவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி தி.மு.க. இளைஞர்- மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய மாவட்டம்

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் மேயர் சர வணன், துணைமேயர் ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாவட்ட துணைச்செயலா ளர்கள் எஸ்.வி. சுரேஷ், விஜிலா சத்தியானந்த், தர்மர், மாவட்ட பொரு ளாளர் வண்ணை சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ். லெட்சுமணன், டி.பி.எம். மைதீன்கான்,

    தி.மு.க. மூத்த முன்னோடி பத்தமடை பரமசிவன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், நமச்சிவாயம், மாநகர துணைச்செயலாளர்கள் அப்துல் கயூம், சுதாமூர்த்தி, மூளிகுளம் பிரபு, மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கவுன்சிலர்கள் கந்தன், உலகநாதன், பவுல்ராஜ், கோகுலவாணி, இளைஞர் அணி ஆறுமுகராஜா மற்றும் இலக்கிய அணி அமைப்பாளர் கொம்பையா பாண்டியன், நிர்வாகிகள் எல்.ஐ.சி பேச்சிமுத்து, மேகை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை கிழக்கு

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.

    இதில் தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் அரசகுமார், மாவட்ட அவைத்தலைவர் கிராகாம்பெல், ஞானதிரவியம் எம்.பி., மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், பொரு ளாளர் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், இசக்கி பாண்டியன், கே.எஸ்.தங்க பாண்டியன், பரணி சேகர், போர்வெல் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் சூடாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    மதுரை

    தமிழகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று (15-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மேலிடம் அறிவித்தது.

    அதன்படி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும், பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை (புறநகர்) தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி - மாணவரணி சார்பில் நடந்தஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் மற்றும் இளைஞரணி மாணவரணி அமைப்பா ளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×