search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி திணிப்பு"

    • இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.
    • ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது.

    சென்னை:

    தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

    இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.

    தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை "Local Language" என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

    ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் ( #StopHindiImposition) என கூறியுள்ளார்.

    • அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான்.
    • நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது, "நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

    அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று மத்திய மந்திரி சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பா.ஜ.க. அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவில் உள்ள மற்ற மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • நம் நாட்டில் தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்.

    சென்னை:

    நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நிலையில், மத்திய அரசு இந்தியை திணிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

    இந்தியாவில் உள்ள மற்ற மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    தமிழகமும் திமுகவும் நமது வரலாற்றில் எப்பொழுதும் பாடுபட்டது போல் #இந்தித் திணிப்பை நிறுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும். ரெயில்வே, தபால் துறை, வங்கி மற்றும் பாராளுமன்றம் என நம்மையும் நம் மக்களையும் நாளுக்கு நாள் பாதிக்கும் மத்திய அரசில் எல்லா இடங்களிலும் இந்திக்கு அளிக்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம்.

    நாங்கள் எங்கள் வரிகளை செலுத்துகிறோம், முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறோம் மற்றும் நமது வளமான பாரம்பரியம் மற்றும் இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நமது மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். நம் நாட்டில் தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என கூறியுள்ளார்.

    • மத்திய உணவு பாதுகாப்பு அமைப்பின் அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், ஆவின் தயிர் பாக்கெட்களில் 'தஹி' என அச்சிடப்படாது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

    'ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்பதால் நடைமுறைப்படுத்த முடியாது' என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    'எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம், தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!' என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறி உள்ளார்.

    • இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு தங்கவேல் வந்தார்.
    • கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 85).

    இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    இவர் தி.மு.க. மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார்.

    அதில் மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதுக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சங்கரன்கோவிலில் நகர தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் முப்புடாதி அம்மன் கோவில் அருகே நடந்தது.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, முன்னாள் நகர செயலாளர் சங்கரன், இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், நகர இளைஞரணி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

    இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    தற்போது தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர்

    மு. க. ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு என்பதில் உறுதி யாக உள்ளார்.

    பா.ஜ.க. தலை கீழாக நின்றாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. உயர் ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது படித்தவர்களுக்கு தெரியும் இதில் பயன்பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும்தான் என்று.

    இன்று இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்து பார்க்கும் வகையில் கட்சியையும் ஆட்சியும் நடத்திய நமது முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் என்பதை இந்த தருணத்திலே நான் குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன்.

    தென்காசி வடக்கு மாவட்டத்தை பொருத்த வரை ஒரு ஆற்றல் மிகுந்த செயலாளரை நமது கழகம் பெற்றிருக்கிறது. இளமையிலேயே மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. என்பது தி.மு.க.விற்கு கிடைத்த அளப்பரிய சொத்து.இனிவரும் காலங்களில் சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. கோட்டையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, முத்தையாபாண்டியன், பூசை பாண்டியன் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் மாரி முத்து, செண்பகவிநாயகம், பாலசுப்ரமணியம், குருசாமி, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, சிவகிரி கோமதி, ராயகிரி இந்திரா, பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, வேல்சாமி பாண்டியன், சாகுல் ஹமீது, மாரிசாமி, தேவதாஸ், மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வக்கீல்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார் சார்பு அணி அமைப்பாளர்கள் சோமசெல்வபாண்டியன், யோசேப்பு, பத்மநாதன், இளைஞர்அணி சரவணன், மாணவரணி உதயகுமார், கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், குமார், அஜய் மகேஷ்குமார்,

    தொண்டரணி முத்துமணிகண்டன் சங்கர், ஆதி மற்றும் வீரமணி, வீரா, சபரிநாத், ஜெயகுமார், பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாழைக்காய் துரைபாண்டியன் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை சந்தித்து கலந்துரையாடினார்.
    • தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சயித் ஷாசேஷதி 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் அவர் இந்தியில் பேச தொடங்கினார். பல அரசு செயலர்களுக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசும்படி கோரினர். இதனால் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் டென்ஷன் ஆனார்.

    இந்தி தேசிய அலுவலக மொழி. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தி தெரியாது என்றால் எப்படி திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என கேள்வி எழுப்பினார். அவரை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

    • களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். துணை பொருளாளர் இளையாராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் ஜலில், துணை தலைவர் உசேன், தொகுதி தலைவர்கள், செய்யது, தவுபிக், செயலாளர் உசேன், ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிராஜ் வரவேற்றார்.

    இதில் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகன், ஐ.மு.மு.க. மாவட்ட தலைவர் சித்திக் புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா ஆகியோர் கண்டன உரையாற்றினார். நகர தலைவர் கமாலுதீன் செயற்குழு உறுப்பினர்கள், முகம்மது ரபிக், ஆரிப்பைஜீ, கபீர், ராம்நாடு பீர்முகம்மது, பத்தமடை நகர தலைவர் ஷெரிப், சேரன்மகாதேவி நகர தலைவர் அஹமது, கவுன்சிலர்கள் அப்துல் கபூர், ரஹ்மத்துல்லாஹ் உள்பட ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராகவும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

    • தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள்.
    • இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது.

    மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி னார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில பேச்சாளர் பொன்னேரி சிவா கூறியதாவது:-

    தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள். முதல் முதலாக சென்னை, சென்னை ராஜ்தானியாக இருந்தபோது ராஜாஜி இந் தியை புகுத்தினார். இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில்பெ ரும்போராட்டம் நடைபெ ற்றது. மொழிக்காகமுதல் முதலில் சின்னச்சாமி உயிர் தியாகம் செய்தார். 1938-ல் மொழிக்காக சிறையில் சாகடிக்கப்பட்ட நடராஜன் மறைவிற்கு அண்ணாமலை செட்டியார் தனது காரை வழங்கினார். 1975-ம் ஆண்டு ஐ.நா. சபை முகப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரேயாவரும்கேளிர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.

    தமிழ் மொழியின் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிர சன்னா கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். உத்தரவுக்கு ஏற்ப மோடி, அமித்ஷா அகியோர் இந்தியை திணித்து வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து கல்விநிறுவனங்க ளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும்.

    இவ்வாறு இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கி ருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. சமஸ்கிருதம் வரும்போது, சனாதானமும் தானாக வந்து விடும். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம். இவ் வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன் னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம்,

    பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், செல்வம், பிராங்கிளின், மதியழகன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் செய்திருந்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அண்ணா சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒன்றிய தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக வி.பி. ராஜன், இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும் என்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் செய்திருந்தார்.

    • இந்தி திணிப்பை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டை பகுதியில் இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திராவிட கட்சியின் மண்டல மாணவர் அணி அமைப்பாளர் அமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் மண்டல தலைவர் பூ எல்லப்பன் மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    என்றும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு வேண்டாம் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரக்கோணம் ஒன்றிய செயலாளர் ச.சி சந்தர், நகர துணைத் செயலாளர் நாகராஜ், திராவிட கட்சியின் மாவட்ட தலைவர் சூ.லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் ஜீவன் தாஸ், நகரச் செயலாளர் ரமேஷ், மதிமுக மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×